செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

காவேரி கொடுத்த டார்ச்சரால் யமுனா கழுத்தில் தாலி கட்டும் நவீன்.. உச்சகட்ட சந்தோஷத்தில் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி தன்னுடைய தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமாகவும், யமுனா ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நவீனுடன் நடக்க வேண்டும் என்று நவீனை டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் நவீன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறார்.

இருந்தாலும் நவீன் எப்படியும் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் யமுனாவிற்கு கல்யாண வேலைகள் அனைத்தையும் காவேரி செய்து வருகிறார். இதையெல்லாம் பார்த்த விஜய், நீ சொன்னபடி நவீன் வந்து விடுவாரா? அப்படியே வந்தாலும் யமுனா கழுத்தில் தாலி கட்டுவதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வியை கேட்கிறார்.
அதற்கு நான் சொன்னாலும் நவீன் கேட்பார்.

சுயநலமாக காவிரி எடுத்த முடிவால் பாதிக்கப்படும் நவீன்

அத்துடன் இதில் யமுனா வாழ்க்கையும் சம்பந்தபட்டிருப்பதால் நிச்சயம் நவீன் நல்ல முடிவுதான் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதில் தேவை இல்லாமல் நீங்க எதையாவது செஞ்சு காரியத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சொல்கிறார். ஆனாலும் விஜய், உங்க குடும்பத்துக்கு தெரியாமல் இப்படி திருட்டுத்தனமாக கல்யாணம் நடந்தால் உன்னுடைய அம்மா அக்கா பிரச்சனை பண்ணுவார்கள்.

அதெல்லாம் தெரிந்தும் நீ எப்படி இந்த அளவுக்கு ஒரு தைரியமான முடிவை எடுத்து இருக்கிறாய் என்று கேட்கிறார். கண்டிப்பாக என்னுடைய அம்மா மற்றும் அக்கா பிரச்சனை பண்ணி கோபப்படுவார்கள். ஆனால் நான் அதையெல்லாம் யோசித்து கொண்டு இருந்தால் யமுனா நம்மளை விட்டுட்டு போய் தப்பான முடிவை எடுத்து விடுவாள்.

அதனால் எனக்கு வேறு வழி இல்லை எந்த கஷ்டம் வந்தாலும் நான் அதை சமாளித்துக் கொள்வேன். ஆனால் என்னுடைய தங்கை எனக்கு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று முழுக்க முழுக்க சுயநலமாக காவிரி பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட விஜய், உன்னுடைய பக்கத்தை மட்டும் யோசிக்கிறாயே நவீன் அப்பா அம்மா பற்றி கொஞ்சமாவது யோசித்தாயா?

அவர்கள் பையனுடைய கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் தானே, அவர்களுக்கு தெரியாமல் ஏன் நவீனை இப்படி திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணுவதற்கு வற்புறுத்துகிறாய் என்று கேட்கிறார். அதற்கு காவேரி, இப்பொழுது நான் அதை எல்லாம் யோசிக்க மனநிலையில் இல்லை. அத்துடன் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது.

நவீன் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிட கூடாது என்ற நோக்கத்தில் தான நீங்க இவ்வளவு தூரம் பேசுகிறீர்கள் என்று விஜய்யை தவறாக புரிந்து கொண்டு காவிரி கோபமாக பேசுகிறார். கடைசியில் விஜய், நான் என்ன சொன்னாலும் நீ காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. நீ என்ன பண்ணாலும் நான் உன் கூட பக்கபலமாக நிற்பேன் என்று சொல்கிறார்.

அதே நேரத்தில் மனசுக்குள் நவீனுக்கு கல்யாணம் நடந்து விட்டால் நம்முடைய ரூட்டு கிளியர் ஆகிவிடும் என்று உச்சகட்ட சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். பிறகு யமுனா கல்யாண பொண்ணு மாதிரி ரெடி ஆகி காவேரி மற்றும் விஜயுடன் கோயிலுக்கு வந்து நவீனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நவீன் வரவில்லை என்றதும் அனைவரும் டென்ஷனாக இருக்கிறார்கள்.

கடைசியில் காவிரிக்காக நவீன், மாப்பிள்ளை கோலத்தில் மணமகனாக வந்து யமுனா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். ஆக மொத்தத்தில் நவீன் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்பதற்கு ஏற்ப காவிரி நல்ல வச்சு செஞ்சு விட்டார். இந்த மாதிரி ஒரு சுயநலத்துடன் காவிரி இருப்பது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் தங்கச்சியோட சந்தோசத்துக்காக நவீனை கல்யாணம் பண்ணி வைத்தார்.

இன்னொரு பக்கம் நவீனுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் விஜய் மனசுக்குள் நாம் முழுசாக இடம் பிடித்து விடலாம் என்ற எண்ணத்திலும் காவிரி இந்த மாதிரி அல்பத்தனமான விஷயங்களை செய்ய துணிந்து விட்டார். இதை தொடர்ந்து ராகினி, வெண்ணிலாவை தேடிப் பிடித்து விஜய் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தப் போகிறார். அப்பொழுது காவேரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்கப் போகிறது.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News