Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தன்னுடைய மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது என்று காவிரி நினைத்து சாரதா அம்மா ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதனால் தான் தாத்தா வந்து விஜய்க்காக சப்போர்ட் பண்ணி பேசிய பொழுது கூட சாரதா அதை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்பி விடுகிறோம்.
இதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டார். அத்துடன் தாத்தா காவிரி கூப்பிட்டது கூட விடாமல் காவிரியை சாரதா தடுத்து விடுகிறார். விஜய் தாத்தா பேசியதை தெரிந்து கொண்ட பிறகு யாரும் எனக்காக பேச வேண்டாம். யார் என்ன சொன்னாலும் காவிரி என்னை புரிந்து கொள்ளுவாள், அவளால என்னை விட்டு எங்கேயும் போக முடியாது சீக்கிரம் என்னுடன் வந்து சேர்வாள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
விஜய்யின் நம்பிக்கையே பார்த்த ராகினி மறுபடியும் காவிரி இந்த வீட்டுக்குள் வந்து விடக்கூடாது என்று அப்பாவுக்கு போன் பண்ணி தகவலை கொடுத்து சாரதா வீட்டில் ஏதாவது குட்டையை குழப்புவதற்கு பிளான் பண்ணிவிட்டார். ஆனால் அதற்குள் காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த வீட்டை விட்டு இந்த ஊரை விட்டு போகலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
இதனால் காவிரி, விஜய்யின் பிரிவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணி அழுகிறார். அத்துடன் காவேரி மற்றும் விஜய் வெளிய நின்று பீல் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கங்கா வந்து காவிரியை தடுத்து கூட்டிட்டு போய்விடுகிறார். இதை எல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு வந்த யமுனாவிடம் நவீன் கோவமாக பேசுகிறார்.
உன்னோட அவசர புத்தியால் தான் எல்லோருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கிறது. உன்னை யாரு போய் ஒப்பந்த கல்யாணத்தை பற்றி குடும்பத்தில் சொல்ல சொன்னா. நீ மட்டும் சொல்லாமல் இருந்தால் அவர்கள் பிரிந்து இருக்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் என்ன ஆனாலும் காவிரியை விட்டு விஜய் பிரிய மாட்டார். விஜய் மனசுக்குள் காவேரி நுழைந்து விட்டார்.
இருவரும் நல்ல புரிதலுடன் வாழ ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் எங்கே நானும் காவிரி வாழ்க்கையில் வந்திட கூடாது என்பதற்காக என்னை வலுக்கட்டாயமாக உன் கழுத்தில் தாலி கட்ட வைத்தார். இது கூட உனக்கு புரிய மாட்டேங்குது என்று திட்டி விடுகிறார். ஆனால் நவீன், விஜயை புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு கூட காவிரிக்கு ஏன் விஜய்யின் காதலை புரிந்து கொள்ள முடியவில்லை.
இருந்தாலும் சாரதா சொன்னபடி வீட்டை விட்டு காலி பண்ண வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு காவேரி வீட்டு சாவியை கொடுப்பதற்கு போகிறார். அப்பொழுது எல்லோரிடம் பேசிவிட்டு விஜய் இடமும் இருந்து பிரிவதற்கு வரும் அந்த நேரத்தில் நிச்சயம் காவிரி அங்கிருந்து போகாதபடி ஒரு விஷயம் நடக்கப்போகிறது. அதாவது காவிரி கர்ப்பம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பரபரப்பான கதையுடன் வர இருக்கிறது.