சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கேவலமான செயலில் ஈடுபட்ட கருணாஸ் பட நடிகை.. அம்மணியை அலேக்காக தூக்கிய போலீஸ்

கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்நீத் கௌர் . தமிழ் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். அதுவும் இப்படத்தில் கருணாஸ் உடன் இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு கருணாசுக்கு ஜோடியாக அடுத்து அடுத்து வரும் படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்காமல் அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு சென்றுவிட்டார். தற்போது சினிமாவிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். மிகக் குறுகிய வயதிலே எம்எல்ஏவாக பதவியும் வாங்கினார். தற்போது இவரிடம் மோச்சி என்ற பட்டியல் கொண்ட சமூக சான்றிதழ் உள்ளது.

navneet kaur
navneet kaur

இந்த சான்றிதழை போலியாக பெற்றதாக அண்மையில் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமைப்பின் நீதிபதிகள் ஆர்டி தனுகா மற்றும் விஜி பிஸ்த் இருவரும் வழக்கை விசாரித்தனர். பின்பு அந்த ஜாதிச் சான்றிதழை ரத்து செய்தனர். மேலும் 2 லட்சம் அபராதம் விதித்து உள்ளதாகவும், 6 மாதத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு நடிகை நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும் இருப்பினும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News