சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராஜா ராணி-2 வேலைக்கார பொண்ணு மயிலா இது.? ஜிம் வொர்க் அவுட்டில் ஆல்யாவை மிஞ்சுட்டாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண் மயிலு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவர் ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் பிறந்துள்ளார். இன்ஜினியரிங் படிக்கும் பொழுது மாடலிங் ஷோ, ராம்ப் வாக், டிவி ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

இஞ்சினியரிங் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த நவ்யா, அவரது பிரண்ட் தமிழ் படம் 2 ஆடிசனுக்கு போக சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். ஆடிஷனில் கலந்து கொண்டு நவ்யா சுஜி செலக்ட் ஆனார். தமிழ் படம் 2 வில் இறுதிச்சுற்றில் ரித்திகா சிங் போல் நடித்து இருந்தார்.

அதன்பிறகு விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். இவர் மிஸ் ஏபி 2015இல் போட்டியில் இறுதிச்சுற்று ஒருவராக பங்கேற்றார். நவ்யா வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். ராஜா ராணி 2 வேலைக்காரப் பெண்ணாக மயிலு கதாபாத்திரத்தின் மூலம் நவ்யா மிகவும் பிரபலமானார்.

இத்தொடரில் பாவாடை தாவணியில் மிகவும் பவ்யமாக நடித்திருப்பார். இவரது படபட பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. சீரியலில் பாவாடை தாவணியில் இருக்கும் நிவ்யா நிஜத்தில் மிகவும் மார்டனாக இருப்பார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள நிவ்யா விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

நவ்யா கவர்ச்சியான உடைகளிலும் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பதிவிடுவார். நவ்யா தற்போது முன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார். சீரியல், திரைப்படம், விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக உள்ள நவ்யா டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

raja-rani-2-mayilu
raja-rani-2-mayilu

ராஜா ராணி 2 இல் மயிலாக நடித்தவர் இவர் என ஆச்சரியப்படுகிறார்கள். இத்தொடரில் வரும் ஆல்யாவை மிஞ்சும் அளவிற்கு  ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Trending News