திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விசித்ரா போலவே மீடியா முன் சந்தி சிரிக்க வைத்த நாயகன் பட நடிகை.. என்ன ஆண்டவரே இதெல்லாம்.?

Kamal – Vichithra: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூகம்பம் டாஸ்க்கில் நடிகை விசித்ரா பேசிய விஷயம் ஒட்டுமொத்த சினிமா உலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு நடிகர் தன்னுடைய ஆசைக்கு விசித்ரா இணங்கவில்லை என்றதும் அவரை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார், எங்கேயும் நியாயம் கிடைக்காமல் சினிமாவை விட்டு விசித்திரா ஒதுங்கியது எல்லாம் மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்திய விஷயம்.

கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமலஹாசன் இந்த விஷயத்தை பற்றி பொத்தாம் பொதுவாக பேசியிருந்தார். அதாவது விசித்ராவின் கணவருக்கு போன் செய்து இது போன்ற ஒரு சூழ்நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி தெரிவித்ததாக சொல்லி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவின் கசப்பான உண்மை பகிரப்பட்ட போதே கமலை பற்றிய ஒரு பகிரங்க குற்றச்சாட்டும் சமூக வலைத்தளத்தில் வெளியானது

Also Read:இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. பிக்பாஸ் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகும் கோமாளி

சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை விமர்சிக்கும் செய்யாறு பாலு யூடியூப் சேனல் ஒன்றில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார். நடிகை ஒருவர் கமல் மீது குற்றம் சுமத்தியதாகவும், அதன் பின்னர் அந்த நடிகை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்ததாகவும் சொல்லியிருந்தார். அந்த நடிகை பகிரங்கமாக அந்த குற்றத்தை ஆங்கில பத்திரிகையின் பேட்டி ஒன்றில் தான் சொல்லி இருந்தார் என பாலு சொல்லி இருக்கிறார்.

நாயகன் பட நடிகை கார்த்திகா

கமல் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் நாயகன். இந்த படத்தில் சாருலதா என்னும் கேரக்டரில் கமலின் மகளாக நடிகை கார்த்திகா நடித்திருப்பார். இதன் ஒரு காட்சியில் கமல் தன் மகளை ஓங்கி அறைவது போல் இருக்கும். கமல் இதில் உண்மையாகவே கார்த்திகாவை ஓங்கி அறைந்ததில் அவர் காதில் இருந்து ரத்தம் வந்து விட்டதாக செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார்.

இதே விஷயத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி என்பவர் பகிர்ந்து இருந்தார். அவர் சொல்லும் தகவலில் நாயகன் படத்தின் போட்டோ சூட்டிற்காக கமல் கார்த்திகாவின் தோள் மீது கை போட்டு இருக்கிறார். அப்போது ஒருமுறை அவர் கையை தட்டி விட்டும் மீண்டும் கமல் அவர் தோள் மீது கை போட்டு இருக்கிறார். என்னை தொட்டு நடிப்பது எனக்கு பிடிக்காது என்று அந்த இடத்திலேயே கமலின் முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டு வந்துவிட்டார் கார்த்திகா.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் கமல் அந்த காட்சியில் கார்த்திகாவின் கன்னத்தை பதம் பார்த்து விட்டாராம். கமல் வேண்டுமென்றேதான் என்னை அடித்து விட்டார், இனி நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லி கார்த்திகா ஒதுங்கி விட்டதாக பெல்லிசேரி அவருடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Also Read:பூர்ணிமாவை பலி கிடாவாக ஆக்கிய மாயா.. நம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமான சூனியக்காரி

Trending News