ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்த அம்மணிக்கு கல்யாணம் நடக்கிறது பெருசு.. இதுல வியாபாரம் வேற! பெருமாளே

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் ரசிகர்களிடம் ஜொலித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து கடந்த சில, பல வருடங்களாகவே லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்கள் இப்பொழுது திருமணம் செய்துகொள்ளும் முடிவை அறிவித்து விட்டனர்.

அவர்களது திருமணம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரைவேட் ரிசார்ட் ஒன்றில் காலை 5.30 மணி முதல் 7 மணி மணிக்குள் இருக்கும் சுபமுகூர்த்தத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களாக 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கின்றனர்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் என முக்கிய விருந்தினர்களாக 30 பேர் வரவுள்ளனர். இந்த திருமணத்தை வைத்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியர்கள் பல திட்டங்களை போட்டுள்ளனர் தம்பதியினர்.

இந்த திருமணத்தை பிரபல தனியார் OTT இல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஒரு பெரும் தொகையை வாங்கியுள்ளனர் இந்த தம்பதியினர். அதுமட்டுமின்றி அஜித், விஜய் போன்ற பெரும் புள்ளிகள் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதனால் யார் யார் நயன்தாரா-விக்னேஷ் சிவன்  திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே இந்த திருமண நிகழ்ச்சியை ரசிகர்கள் நிச்சயம் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் பெரிய திட்டத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியர் போட்டுள்ளனர்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், முன்பு திருப்பதியில் நடத்தத் திட்டமிட்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மகாபலிபுரத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றனராம்.

Trending News