திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திருமணத்திற்கு பின் சுத்தி சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்.. ஒரே வருடத்தில் விக்கி-நயன் எடுத்த சோக முடிவு.!

கடந்த ஆண்டு பல பிரபலங்களின் திருமணம் நடைபெற்றது. அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணமும் ஜூன் மாதம் நடைபெற்றது. சினிமாவில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விக்கி, நயன் தம்பதியினரை வாழ்த்தி இருந்தனர். ஆனால் கல்யாணத்திலிருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.

அதாவது திருமணத்தின் போது பவுன்சர்கள் பிரபலங்களை டார்ச்சர் செய்ததாக கூறப்பட்டது. அதன்பின்பு மறுநாள் திருப்பதி தேவஸ்தானம் சென்ற போது நயன் செருப்பு அணிந்ததாக சர்ச்சை எழுந்தது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க திருமணமான நான்கே மாதத்தில் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது.

Also Read : நீங்க இல்லன்னா என்னால பிழைக்க முடியாதா.. ஷாருக்கானை நம்பி புது கணக்கு போடும் நயன்தாரா

இப்போது திருமணமாகி 8 மாதங்கள் ஆகியும் இவர்களை சர்ச்சை தொடர்ந்து தான் வருகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் இப்போது பறிபோய் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி ஜோசியரை நாடி உள்ளனர். அப்போது நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரம் சரியில்லை என கூறியுள்ளார். ஆகையால் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருக்க வேண்டுமாம்.

Also Read : கடைசி வரை நயன்தாராவை வைத்து விளையாட்டு காட்டிய விக்னேஷ் சிவன்.. உச்சக்கட்ட பிபி-யில் விரட்டிய அஜித்

அதன் பிறகு மீண்டும் நல்ல நேரம் பார்த்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலிகட்ட வேண்டும் என்று ஜோசியர் கூறியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சனை வருவது கெட்ட நேரத்தில் தாலி கட்டியது தான் என்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நம்பியதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் விக்னேஷ் சிவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோயிலுக்கு சென்று வழிபடும் புகைப்படங்கள் பல வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஜோசியரின் அறிவுறுத்தலின்படி மீண்டும் நயன் விக்கி திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : நயன்தாரா மீது வன்மத்துடன் சுற்றும் சில்வண்டு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை

Trending News