வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கல்லா கட்டாத நயன்தாராவின் கனெக்ட்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தால் ரத்தமா அம்மணி

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் நேற்று வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுடன் அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் கனெக்ட் படத்தின் இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே நயன்தாரா தற்போது ஊர் ஊராக சென்று படுச்சோராக கனெக்ட் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இப்படி நயன்தாரா நடந்து கொள்வது கோலிவுட்-டிற்கே புதிதாக இருக்கிறது.

Also Read: அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

அதுமட்டுமின்றி படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருப்பதால், அதை அதிகப்படுத்த நயன்தாரா பக்கா பிளான் போட்டு செயல்படுகிறார். முதலில் இவர் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் போது இவ்வளவு மெனக்கிடுவது கிடையாது.

ஆனால் இப்போது அடுத்தவன் போட்ட காசுன்னா ப்ரமோஷனுக்கு வராத நயன்தாரா தன்னுடைய சொந்த படம் அப்படின்னு உடனே மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை என்று விளம்பரம் செய்து வருகிறார். இது எவ்வளவு கேவலமான ஒரு செயல் உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்கிறது கோலிவுட்.

Also Read: அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

அதற்கேற்றார் போல் டிசம்பர் 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதுரையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்ள போகிறார். அதுமட்டுமின்றி இவர் மதுரையின் பேமஸ் திரையரங்குகளான வெற்றி சினிமாஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் போன்ற இரண்டு திரையரங்குகளுக்கும் வருகை தருகிறார்.

இதனால் இதை வைத்தே இந்தத் திரையரங்குகளின் டிக்கெட் விற்பனை சூடு பிடிக்கிறது. ஆகையால் இதேபோன்று இன்னும் பிற மாவட்டங்களிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் திரையரங்குகளில் சென்று நேரடியாக பார்வையிடுவதன் மூலம் கனெக்ட் படத்தின் கலெக்சனை அள்ளி விட வேண்டும் என நயன்தாரா தமிழகம் முழுவதும் ரவுன்சில் இருக்கிறார்.

Also Read: பகிரங்கமாக போட்டுக் கொடுத்த நயன்தாரா.. கனெக்ட் தோல்வியால் புத்தாண்டை இப்பவே கொண்டாடும் நடிகை

Trending News