ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திருமணத்திற்குப் பின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்த நயன்.. அடுக்கடுக்காக 6 சர்ச்சையில் சிக்க வைத்த விக்கி

Nayanthara lost Lady super star Name: நயன்தாரா சினிமாவிற்குள் நுழைந்து 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்த மாதிரி இவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கக்கூடிய ஹீரோயினாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனாலேயே இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் ரசிகர்கள் மூலமாக கிடைத்தது.

ஆனால் இவருடைய திருமணத்திற்கு பின் இந்த பட்டத்தை இழக்கும் அளவிற்கு அடுக்கடுக்காக பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இதற்கு பின்னணியில் ஒரு வகை காரணமாக இருப்பது இவருடைய கணவர் விக்னேஷ் சிவன். அதாவது இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இப்படி இவர்கள் ஒன்று சேர்ந்த பிறகு தான் ஒவ்வொரு பிரச்சினையாகவே வெடிக்க ஆரம்பித்தது. அதிலும் நயன்தாரா பல வழிகளில் சோதனையை தான் சந்தித்திருக்கிறார். முதலில் இவருடைய மேரேஜ் வீடியோவை வைத்து netflix-ல் விற்று அதற்கேற்ற மாதிரி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து மிகவும் அசிங்கப்பட்டு இருக்கிறார்.

Also read: ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

அடுத்ததாக கல்யாணமாகி இரண்டு மூன்று மாதங்களிலே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு அம்மாவாகி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அடுத்து கணவன் குழந்தைகளுடன் அடிக்கடி நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக இவரை புக் பண்ணிய இயக்குனரை அலைக்கழிக்கும் விதமாக அவர்களை கண்டுக்காமல் போய்விட்டார்.

அத்துடன் இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு பிரமோஷனுக்கு போகாதவர் தன் தயாரித்த படம் என்றதும் பயங்கரமாக பிரமோஷன் செய்து அசிங்கப்பட்டார். அது மட்டுமில்லாமல் பிசினஸிலும் எப்படியாவது கல்லா கட்ட வேண்டும் என்று நயன்தாரா அவர்களுடைய குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிலும் மார்க்கெட்டை தேடிக்கொண்டார்.

மேலும் நடிப்பில் கவனம் செலுத்துவதை காட்டிலும் பிசினஸில் பணத்தை வாரி இறைக்க ஆரம்பித்து விட்டார். இவர் இந்த மாதிரி நடந்து கொண்டதற்கு காரணம் விக்கி தான். இவருடைய கணவர் சொல்லி தான் ஒவ்வொன்றாக நயன்தாரா செய்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து நிற்கிறார். தற்பொழுது இவருடைய ரசிகர்களுக்கு இவர் பெயர் கேட்டாலே வெறுக்கும் அளவிற்கு ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அலோல்லப்பட்டு வருகிறார்.

Also read: காமெடி நடிகரிடம் அப்பட்டமாக தோற்றுப் போன நயன்தாரா.. பிரமோஷன் செஞ்சும் திருப்பி செய்த கர்மா

Trending News