ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

திருப்பதிக்கு சென்ற விக்கி, நயன் ஜோடி.. வெளிவந்த புதுமண தம்பதிகளின் போட்டோ

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது தம்பதிகளாக மாறியிருக்கின்றனர்.

நேற்றிலிருந்து நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது தங்களின் நேர்த்திக்கடனை செய்யும் பொருட்டு இவர்கள் இருவரும் திருப்பதிக்கு சென்று உள்ளனர்.

அங்கு அவர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா, விக்கியின் கையை இறுக பிடித்தபடி வரும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

vignesh nayan
vignesh nayan

மேலும் மஞ்சள் நிற புடவையில், கழுத்திலிருக்கும் தாலி வெளியில் தெரியும்படி அவர் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இன்று திருப்பதியில் இருந்து வரும் இந்த ஜோடி நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருக்கின்றனர்.

அதன்பிறகு இவர்களின் திருமண வரவேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த நயன்தாரா திட்டமிட்டுள்ளார். அது குறித்த அறிவிப்பை அவர் நாளை நடைபெற உள்ள பிரஸ்மீட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News