ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

திருமணத்திற்கு பின் ஹனிமூன் இல்லையாம்.. வயதானதால் நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் தற்போது காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாகியுள்ளது. அவரின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது திருமணம் வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். அவர்களின் பல வருட கனவு தற்போது நனவாக இருக்கிறது. அதன்படி இவர்களுடைய திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏனெனில் பல வருடங்களாக நயன்தாரா எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று அவர்கள் தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் நடிப்புக்கு பிரேக் எடுக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இருக்கிறார். ஏனென்றால் நயன்தாரா இப்போது உடல் இளைத்து ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்போது வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் கூட அவருடைய தோலில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் அவரை வயதானவர் போல் காட்டியது.

இதுபோன்ற பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதனால் நயன்தாரா தற்போது திருமணம் முடிந்த கையோடு தன் உடலை பொலிவாக்கும் முயற்சியில் இறங்க இருக்கிறார். அதன் பிறகு அவர் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News