வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விக்னேஷ் சிவனின் முடிவுதான் என் முடிவு.. கறாராக சொன்ன நயன்தாரா

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஒரு இந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நயன்தாரா அட்லியின் முதல் திரைப்படமான ராஜா ராணியில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போதிலிருந்தே அவர்கள் இருவரும் பாசமலர்கள் போல் அன்புடன் பழகி வந்தனர். அதனால்தான் அட்லி, நயன்தாராவை தான் இயக்கும் இந்தி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

நயன்தாராவுக்கும் பாலிவுட் பக்கம் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஏனென்றால் ஹிந்தி திரையுலகில் அதிக வயது கொண்ட நடிகைகள் தான் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதனால் 30 வயதை தாண்டிய நயன்தாராவும் ஹிந்தியில் தன் முத்திரையைப் பதிக்க ஆசைப்படுகிறார்.

இதை அறிந்து கொண்ட அட்லி தன் பாசமலரின் ஆசையை நிறைவேற்ற அங்கு இருக்கும் பல சினிமா ஏஜென்டுகளை நயன்தாராவிற்கு அறிமுகப்படுத்தி வருகிறார். அவர் தென்னிந்தியாவில் பிரபல நடிகை என்பதால் அவருக்கு கைவசம் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இதனால் அவர் கிட்டத்தட்ட பத்து படங்களை ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருக்கிறார். அந்தப் படக் கம்பெனிகள் நயன்தாராவுடன் அக்ரிமெண்ட் போட ரெடியாகும் போது அவர் தன் காதலர் விக்னேஷ் சிவனிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அனுமதி கொடுத்தால் மட்டும் தான் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் விக்னேஷ் சிவனை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News