திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒருபுறம் விக்னேஷ் சிவனுடன் திருமணம்.. மறுபக்கம் வரிசை கட்டி நிற்கும் நயன்தாராவின் 5 படங்கள்

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன் நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணம் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த இந்த திருமணத்துக்கு இப்போதிலிருந்தே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்பும் நயன்தாராவின் நடிப்பில் அடுத்தடுத்து 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வரிசை கட்டி நிற்கின்றது. ஒருபுறம் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் நயனுக்கு மறுபக்கம் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் 5 திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

ஓ 2 ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து வரும் நயன்தாராவின் நடிப்பில் ஓ 2 திரைப்படம் வெளிவர இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எதிர்பாராத விபத்தினால் பூமிக்கடியில் மாட்டிக்கொள்ளும் பேருந்தில் தன் மகனுடன் தவிக்கும் நயன்தாரா அதிலிருந்து எப்படி வெளிவருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

கோல்ட் பிரேமம் பட புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

காட்பாதர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த திரைப்படம். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஜவான் பிரபல இயக்குனர் அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இந்தியில் இயக்கி வரும் திரைப்படம் ஜவான். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டிலும் களமிறங்க உள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

கனெக்ட் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மாயா திரைப்படத்தை போன்றே ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News