திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோல்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ஹாலிவுட் படத்தின் காப்பியா!

புதுப் பெண்ணாக ஒருபுறம் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் நயன்தாரா மறுபுறம் நடிப்பிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. அதன் அடிப்படையில் இவர் மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து நடித்திருக்கும் கோல்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

பிரேமம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ளார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் வித விதமான கோணத்தில் இருப்பது போன்று வெளியாகி இருக்கிறது. இது ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்தின் போஸ்டர் போலவே இருக்கின்றது.

மேலும் அந்த இரண்டு போஸ்டர்களில் இருக்கும் கேரக்டர்களும், அந்த வட்டமும் பார்க்கும்போது அச்சு அசல் ஒன்றாக இருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் போஸ்டர் மட்டும் தான் காப்பியா அல்லது படத்தின் கதையும் காப்பியா என்று அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் அல்போன்ஸ் புத்திரன் அந்த போஸ்டரின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இந்த போஸ்டரை உருவாக்கி இருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் படம் வெளிவந்தால் உண்மை என்ன என்பது தெரிந்துவிடும்.

தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்கி இருப்பதால் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

gold-nayan
gold-nayan

Trending News