சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சைக்கிள் கேப்பில் வெளியாகும் நயன்தாராவின் புதிய படம்.. அம்மணிக்கு OTT தான் புடிச்சிருக்கு போல

கதையின் நாயகியாக கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் பவர்ஃபுல் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து வரும் நயன்தாரா மீண்டும் அப்படி ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் பெயரிடப்படாமல் உருவாக்கிக் கொண்டிருந்த படத்திற்கு தற்போது தலைப்பு என்ன என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஜி கே விக்னேஷ் இயக்கி வரும் அந்த படத்திற்கு ஓ 2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது இது ஆக்சிஜன் என்பதை குறிக்கும் பொருட்டு ஆக்சிஜன் சிலிண்டரை போன்று வடிவமைக்கப்பட்டு இந்த தலைப்பு வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்னதாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தையும் ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. அந்தப் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் இந்தத் திரைப்படத்திலும் ஒரு வலுவான கேரக்டரை ஏற்று நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் இணைந்து யூடியூப் மூலம் பிரபலமாக இருக்கும் குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நயன்தாராவுக்கு மகனாக நடித்துள்ளதாக தெரிகிறது.

சோஷியல் மீடியாவின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் ரித்விக் இந்த படத்தின் மூலம் அறிமுகமாவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படம் எப்போது வெளியாகும் என்ற தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க இருக்கிறது.

Trending News