வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேக்கப்மேனுக்கு வாரி இறைக்கும் நயன்தாரா, சமந்தா.. ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவா?

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக அழகில் மிளிரும் ஹீரோயின்களுக்கு மேக்கப் என்பது அவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால் அது அவர்களின் அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு நயன்தாரா, சமந்தா போன்ற டாப் நடிகைகள் திரைப்படங்களில் அவ்வளவு அழகாக தெரிவது இந்த மேக்கப்பால் தான். அந்த காலத்தில் எல்லாம் ஒரு படத்திற்கு ஒரு மேக்கப் மேன் தான் இருப்பார். அவரே ஹீரோ, ஹீரோயின்களுக்கு மேக்கப் செய்து அழகாக காட்டுவார்.

Also read:பணத்தாசையால் சமந்தா எடுத்த திடீர் முடிவு.. ஓரங்கட்டிய தயாரிப்பாளர்கள்

ஆனால் இப்போது அப்படி கிடையாது வளர்ந்து வரும் நடிகைகள் கூட தங்களுக்கென மேக்கப், ஹேர் ஸ்டைல் போன்றவற்றிற்கு உதவியாளர்களை நியமித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் நயன்தாரா, சமந்தா இருவரும் திரை துறையில் பெஸ்டாக இருக்கும் மேக்கப் மேனை தான் உதவிக்கு வைத்திருக்கிறார்களாம்.

அவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கிறது. அதாவது நயன்தாரா தன்னுடைய மேக்கப் மேனுக்கு ஒரு நாளைக்கு மட்டும் 55 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கிறாராம். அதேபோன்று சமந்தா தன்னுடைய மேக்கப் மேனுக்கு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வருகிறார்.

இதை வைத்துப் பார்த்தால் ஒரு படம் முடிவதற்குள்ளாகவே அவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால் இந்த சம்பளத்தை அவர்கள் தங்கள் சொந்தக்காசில் இருந்து கொடுப்பது கிடையாது. தயாரிப்பாளர் தான் அவர்களுக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Also read:சமந்தாவின் வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு வைத்து சின்மயி.. விவாகரத்துக்கான காரணம் இதுதான்

மேலும் அவர்களுக்கான தங்கும் வசதி உட்பட அனைத்தையும் அவர்கள் தான் செய்து கொடுக்க வேண்டும். இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் தற்போதைய சினிமா துறையில் இது போன்ற இன்னும் பல அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இதனால்தான் தற்போது தெலுங்கு திரையுலகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதாவது இதுபோன்று உதவியாளர்களை வைத்துக் கொள்ளும் நடிகைகள் அவர்களுக்கான சம்பளத்தை அவர்களே தான் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிவிப்பு தமிழ் சினிமாவிற்குள்ளும் வந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் தற்போது பலரின் கருத்தாக இருக்கிறது. தயாரிப்பாளர்களே அனைத்து செலவையும் ஏற்பதால்தான் நடிகைகள் ஒன்றுக்கு மூன்று உதவியாளர்கள் வரை வைத்துக் கொண்டு பலரையும் கடுப்பேற்றுகிறார்கள்.

Also read:நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

Trending News