புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பணம் பாதாளம் வரை பாயும், உறுதி செய்த நயன்தாரா.. சிக்கலில் இருந்து தப்பிக்க பக்காவா ரெடியான சர்டிபிகேட்

நயன்தாரா, விக்கி  திருமணம் செய்து வெளிநாடுகளுக்கு ஹனிமூன் என்று பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். திடீரென திருமணமான நான்கு மாதங்களில் எங்களுக்கு குழந்தை பிறந்து விட்டது நாங்கள் அப்பா, அம்மா ஆகி விட்டோம் என்று டுவிட்டரில் விக்கி போட்ட செய்தி மற்றும் போட்டோக்கள் தமிழ் ரசிகர்களை பரபரப்பாக்கியது.

குழந்தை பிறந்தது சந்தோஷமாக இருந்தாலும் அது எப்படி நான்கு மாதத்தில் பிறக்கும் என்று கேள்வி எழுந்து பின்னர் அது வாடகை தாய் மூலம் பிறந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் விளையாட்டாக செய்த செயல் தமிழக அரசு வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. அரசு இதற்கு விசாரணை கமிஷன் அமைத்தது.

Also Read : வாடகத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொடுத்த ஷாக் தகவல்

திரும்பும் இடமெல்லாம் இவர்களைப் பற்றிய பேச்சு வாடகைத் தாய் பற்றிய பேச்சு மட்டுமே ஊடகங்களில் நிறைந்திருந்தது. ஆனால் இவர்கள் மட்டும் மௌனம் சாதித்து வந்தனர். சென்னையிலுள்ள எக்மோரில் தனது வீட்டில் உள்ளேயே முடங்கி இருந்தனர். இதற்கு பதில் ஏதும் அளிக்காமல் புத்திசாலித்தனமாக வக்கீல்களை வைத்து என்ன பண்ணலாம் என்ற திட்டம் தீட்டி வந்தனர்.

கடைசியில் திடீரென நாங்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம். கடந்த டிசம்பர் மாதமே நாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறப்பதை உறுதிப் படுத்தி விட்டோம். என்று அரசாங்கத்திற்கு தேவையான பதில்களை வக்கீல்களை வைத்து தமிழக அரசின் வாயை மூடினார்கள்.

Also Read : லேடி சூப்பர் ஸ்டார் புருஷனா சும்மாவா.. நயன்தாராவால் படாத பாடுபடும் விக்னேஷ் சிவன்

இப்பொழுது அடுத்த பிரச்சனை இத்தனை நாள் ஏன் 6 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் சான்றிதழ் இல்லையா. பிரச்சனை ஆரம்பித்து 15 நாள் கழித்து எப்படி திடீரென அது வந்தது. அப்படி என்றால் பணத்தை வைத்து சான்றிதழை தயாரிக்க கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளனர் என்று அப்பட்டமாக தெரிகிறதாம், எப்படி இந்த சான்றிதழ் இரண்டு வாரத்தில் ரெடி பண்ண முடியும் எல்லாமே காசு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். பணம் பாதாளம் வரை செல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி ஒரு ஐடியா செய்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.

ஏற்கனவே நயன்தாரா மீது கோபத்தில் இருக்கும் ரசிகர்கள், இந்த செயலைப் பார்த்து இன்னும் கோபப்படுகிறார்கள். நயன்தாரா செய்வது பணத்தை வைத்து தவறு செய்யலாம் யார் வாயையும் மூடலாம் யார் என்ன கேட்பார்கள் என்ற எண்ணத்தை அவர் அனைவர் மனதிலும் விதைக்கிறார்.  இதிலிருந்து தப்பித்துக் கொண்டாலும் பழைய ரசிகர்களை திரும்பப் பெற முடியாது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற ரசிகர்கள் தற்போது கூறி வருகிறார்கள். காரணம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய ஒரு பெண் இப்படி நடந்துகொள்வது ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறது. 

Also Read : வெளியவே தலைகாட்ட முடியாமல் செய்த நயன்தாரா.. அழுது புலம்பிய அப்பா, அம்மா

Trending News