வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா திமிரை எல்லாம் மிஞ்சிய திமிரு.. சி.எம் தோரணையில் புது நடிகை

சினிமாவில் பேரும், புகழும் வந்து விட்டாலே சில நடிகைகள் ஓவர் கெத்து காட்டி வருவார்கள். அதிலும் ஒன்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டாலே தலைகால் புரியாமல் ஆடும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் பிரபல நடிகை ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே மிஞ்சும் அளவுக்கு அட்ராசிட்டி செய்து பலரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறாராம்.

இத்தனைக்கும் அந்த நடிகை பெரிய மாஸ் எல்லாம் கிடையாது. மற்ற மொழிகளில் வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் தமிழில் அவர் அறிமுகமான முதல் படமே பெரிய அளவில் ஓடவில்லை. ஆனாலும் அவர் இரண்டாவது படத்திலேயே விஜய் உடன் ஜோடி போடும் அளவுக்கு அதிர்ஷ்ட நடிகையாக மாறி இருக்கிறார். அதனாலேயே அவருடைய ஆட்டிடியூட் ரொம்பவே அதிகமாக இருக்கிறது.

Also read: ஓவர் கெத்து காட்டிய ராஷ்மிகா.. கண்டுக்காமல் நோஸ்கட் செய்த காந்தாரா இயக்குனர்

அவர் வேறு யாரும் அல்ல தற்போது வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ராஷ்மிகா தான். தெலுங்கில் இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ராஷ்மிகா ரசிகர்களின் க்ரஷ் நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அவர் ஓவர் ஹெட் வெயிட் காட்டி வருகிறாராம்.

அதிலும் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது அவர் கொடுத்த அலப்பரையை பற்றி தான் தற்போது ஒரு பேச்சாக இருக்கிறது. அதாவது நிகழ்ச்சிக்கு வரும்போது அவர் நான் வரும் காருக்கு முன்னும் பின்னும் பைலட் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று பட குழுவுக்கு ஆர்டர் போட்டு இருக்கிறார். படகுழுவும் வேறு வழியில்லாமல் அவர் கேட்டதை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

Also read: வம்சியின் மெத்தனத்தால் கடுப்பில் இருக்கும் விஜய்.. ஆசையில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

அதன் பிறகு தான் அம்மணி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தாராம். அதிலும் அந்த இரண்டு கார்களிலும் ஏராளமான பாதுகாவலர்கள் அவருக்கு துணையாக வந்திருக்கிறார்கள். பொதுவாக முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு தான் இது போன்ற பாதுகாப்பு கொடுக்கப்படும். மேலும் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்கு பாதுகாப்பாக சில பவுன்சர்கள் இருப்பார்கள்.

அதேபோன்று நயன்தாரா கூட சில முக்கிய நிகழ்ச்சிகளில் தனக்கு பாதுகாப்பாக சில பவுன்சர்களை அழைத்து வருவதுண்டு. ஆனால் அவரை விட ராஷ்மிகா அதிக பந்தா காட்டி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தது தான். வாரிசு திரைப்படத்தில் கமிட் ஆனதிலிருந்து அவர் இப்படித்தான் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று திரை உலகில் பேசி வருகின்றனர்.

Also read: 3 வருடம் நயன்தாராவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகர்.. இப்ப ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தாச்சு

Trending News