அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போடும் நயன்தாரா.. பொண்டாட்டியை சந்தேகத்தோடு சுற்றி வரும் விக்கி

Actress Nayanthara: நயன்தாரா இப்போது பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடையவில்லை. அதை தொடர்ந்து தற்போது அவர் மிகப்பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.

அதற்காகத்தான் ஜவான் படத்தில் அவர் எந்த லிமிட்டும் இல்லாமல் நடித்திருக்கிறாராம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள செகண்ட் சிங்கிள் பாடல் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் அதில் நயன், ஷாருக்கானுடன் ரொம்பவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்.

Also read: மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

காதல் பாடலாக வெளிவந்துள்ள அதில் முத்தக் காட்சியும் இருக்கிறது. இப்படி ரொமான்ஸ் பொங்கி வழியும் அந்த பாடலை பார்த்த பலரும் என்ன விக்கி இதெல்லாம், உங்கள் மனைவி இப்படி ரொமான்ஸ் செய்கிறாரே என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக நயன்தாரா சோலோ ஹீரோயின் படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

டாப் ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்திருந்தாலும் எல்லை மீறாத அளவுக்கு தான் அவர் நடித்திருக்கிறார். ஆனால் ஜவான் செகண்ட் சிங்கிள் பாடலில் அவர் ஓவர் ரொமான்டிக்காக நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் தமிழ் ஹீரோக்களுடன் இப்படி எல்லாம் நடிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா

ஆனால் உண்மையில் பாலிவுட்டில் தன்னுடைய அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போடுவதற்காக தான் நயன்தாரா எந்த கண்டிஷனும் இல்லாமல் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஏனென்றால் தற்போது அவர் ஹிந்தியில் தான் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பாலிவுட்டின் டாப் ஹீரோக்களின் படங்களில் இவர் நடிப்பதற்கும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதனாலயே அவர் இப்போது பாலிவுட் திரை உலகிற்கு ஏற்றது போல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் பாவம் விக்கி தான் பொண்டாட்டியை பாதுகாக்க கொஞ்சம் சந்தேகத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

Also read: 7 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த தரிசனம், நயன் கொடுத்த என்ட்ரி.. ட்ரெண்டாகும் புகைப்படம்