செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நிஜத்துல வேணும், ஆனா சினிமால அந்த அசிங்கம் வேணாம்.. 4 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த நயன்தாரா.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து விட்டு, தமிழில் ஐயா, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர். அதன்பின் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த நயன்தாரா, வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

அதன்பின் நயன்தாராவின் திரைப்படங்கள் சரியான அளவில் ஓடாத நிலையில், திடீரென நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அத்திரைப்படத்தை இயக்கிய நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நயன்தாராவுடன் திருமணம் செய்துகொண்டு வாழப் போவதாக தெரிவித்திருந்தார். அப்பொழுது நயன்தாராவிற்கு தெரியவில்லை காமம் கண்ணை மறைத்ததால் அடுத்தவர் கணவரை விரும்பினார்.

Also Read : தமிழ் நடிகர்கள் சிக்கி தவித்த 6 சர்ச்சைகள்.. கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட நயன்தாரா

அந்த சமயத்தில் பிரபுதேவாவின் மனைவி நயன்தாராவை பயங்கரமாக அவமானப்படுத்திய நிலையில், நயன்தாரா அந்த உறவில் இருந்து வெளியில் வந்தார். அதன்பின் நயன்தாரா 2011ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தில் சீதாவாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நயன்தாராவிற்கு அதிக விருதுகளும், புகழும் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நயன்தாரா தேர்ந்தெடுத்த பல திரைப்படங்கள் பெண்களை மையப்படுத்திய கதைக்களமாகவே அமைந்தது. இதனிடையே ஹிந்தியில் 2018ஆம் ஆண்டு நடிகர் ஆயுஷ்மான் குர்ரான நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. இதில் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாகவும் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்

Also Read : உனக்கு நெஜமாவே அது இருக்கா.? நயன்தாராவை அவமானப்படுத்திய பிருந்தா மாஸ்டர்

இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை 4 கோடி ரூபாய் கொடுத்து படக்குழு புக் செய்த நிலையில், அப்படத்தின் கதையை கேட்டு நயன்தாரா வேண்டாம் என உதறித்தள்ளினாராம். அத்திரைப்படத்தில் கள்ளக் காதலனுக்காக தனது கணவனை கொல்லும் மனைவியாக நடிக்குமாறு நயன்தாராவிற்கு கதை சொல்லப்பட்டதாம்.

இந்நிலையில் நான் சீதாவாக தெலுங்கில் நடித்த போது மக்கள் என்னை அரவணைத்தார்கள். தற்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தால் என்னை மக்கள் ஏற்க மாட்டார்கள், எனக்கும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என கொடுத்த நான்கு கோடி ரூபாய் பணத்தையும் நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

Also Read : நயன்தாராவால் மருத்துவமனைக்கு சீல்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என எஸ்கேப்

Trending News