திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த ஆபத்து.. அடுத்தடுத்த தோல்விகளால் கவனிக்கப்படாமல் போன நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாராவுக்கு இந்த வருடம் ஒரு சில விஷயத்தில் சிறப்பாக இருந்தாலும் பல விஷயங்கள் அவருக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் திருமணம், குழந்தைகள் என்று நயன்தாரா உற்சாகமாக இருக்கிறார்.

ஆனால் சினிமாவை பொருத்தவரை இந்த வருடம் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரவேற்பை பெற்றிருந்தாலும் நயன்தாராவை விட சமந்தாவை தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

Also read : உதயநிதியை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. நயன்தாரா, நண்பனை நம்பி மூக்குடைந்த சோகம்

ஏனென்றால் எடையை குறைக்கிறேன் என்று நயன்தாரா அநியாயத்திற்கு ஒல்லியாக பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருந்தது தான் அதற்கு முக்கிய காரணம். அதைத்தொடர்ந்து அவர் சோலோ ஹீரோயினாக நடித்திருந்த O2 திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இவர் நடித்த காட்பாதர் திரைப்படம் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த திரைப்படமும் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யவில்லை. இப்படி தமிழ், தெலுங்கு அவருக்கு தோல்வியை கொடுக்க மலையாளத்தில் உருவான கோல்டு திரைப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்தார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய அந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.

Also read : மீண்டும் வெறி கொண்டு களத்தில் இறங்கும் நயன்தாரா.. செம ஸ்டைலிஷ் ஆன லேட்டஸ்ட் புகைப்படம்

இப்படி இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் அவருடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி விட்டுள்ளது. இருப்பினும் அவர் விரைவில் வெளியாக இருக்கும் கனெக்ட் திரைப்படத்தை ரொம்பவும் எதிர்பார்த்து வருகிறார். ஆனால் சமீபத்தில் வெளியான அதன் ட்ரெய்லரே ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

மேலும் அதில் நயன்தாராவின் தோற்றமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி இனி தேவையே இல்லை என்ற அளவுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து வருவேன் என அவர் நம்பிக்கையோடு இருக்கிறாராம்.

Also read : உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

Trending News