சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

படம் ஓடாது என தெரிந்து சம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்

டாப் ஹீரோக்களை பொறுத்தவரையில் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடிப்பார்கள். ஆனால் அவர்களது சம்பளத்தை பார்த்தால் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் தான் முன்னணி ஹீரோயின்களும் வருஷத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களில் தான் நடிப்பார்கள்.

அந்த வகையில் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நயன்தாரா தான் அதிக சம்பளம் பெற்று நம்பர் ஒன் இடத்தை தற்போது வரை தக்க வைத்துள்ளார்.

Also Read : சத்தமே இல்லாமல் வேலை பார்த்துள்ள ஜோதிகா.. நயன்தாராவுக்கு இணையாக ஒரு ரவுண்ட் வரப்போறாங்க

சாதாரணமாக ஹீரோயின்கள் ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பது கடினம் தான். ஆனால் நயன்தாரா கனெக்ட் படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம். கனெக்ட் படம் கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நயன்தாரா சம்பளம் வாங்கி இருந்தால் 10 கோடி பட்ஜெட்டாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் நயன்தாரா சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என்று பெருமையாக பேசினாலும் சில கண்டிஷன் போட்டிருந்தாராம். அதாவது சில காட்சி எடுக்கும் போது என்மீது தூசி, மண் ஆகியவை படக்கூடாது என்று கூறியிருந்தராம். அதுமட்டுமின்றி சில கஷ்டமான காட்சிகளிலும் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி உள்ளார்.

Also Read : நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்

இதனால் கனெக்ட் படத்தில் இயக்குனர் அஸ்வின் சரவணன் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாமல் திணறி உள்ளார். ஆகையால் படம் அவர் எதிர்பார்த்ததை விட மோசமாகத்தான் வந்துள்ளது. மேலும் படம் வெளியாகி போட்ட பட்ஜெட் ஐந்து கோடியை கூட தொடவில்லையாம்.

அந்த அளவுக்கு மிக மோசமான வசூலை கனெக்ட் படம் பெற்றுள்ளது. ஏதோ தயாரிப்பாளருக்கு உதவுவது போல சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து கடைசியில் அவர் தலையில் துண்டை போடும் அளவிற்கு மாற்றி உள்ளார் நயன்தாரா. அதுமட்டுமின்றி வெளி உலகத்திற்காக கனெக்ட் படத்திற்கு வெற்றி விழா நடத்தி கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.

Also Read : நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த 4 படங்கள்.. எவ்வளவு தாஜா பண்ணியும் அஜித்திடம் பழிக்காத ஜம்பம்

Trending News