புதன்கிழமை, ஜனவரி 1, 2025

வயது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் நயன்தாரா.! இயக்குனரை விட்டு விளாசிய சம்பவம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆகிறது. நயன்தாரா சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை.

அதனால் சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார். அவ்வாறு நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படத்திற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கியுள்ளது.

ஆனால் நயன்தாரா படங்கள் பெரிய அளவில் வசூல் பெறுவதில்லை இருந்தாலும் நயன்தாராவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் நயன்தாரா தொடர்ந்து இயக்குனர்களிடம் சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தான் நடிக்கும் படத்தில் இவரைவிட அழகிலும் திறமையிலும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே நடிக்க வைக்க முயற்சி செய்வதாக கூறி வருகின்றனர்.

இதில் நயன்தாராவுக்கு தங்கையாக சின்னத்திரையிலிருந்து பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்ற வாணி போஜனை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் முடிவு செய்துள்ளார். வாணி போஜனின் ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணிக்கிறார்கள்.

ஆனால் நயன்தாரா, வாணி போஜன் தனக்கு தங்கையாக நடிக்க கூடாது என கடுமையாக சொல்லிவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் வாணி போபோஜன் உங்களுக்கு தங்கையாக கச்சிதமாக பொருந்துவார் என்று மீண்டும் கேட்டுள்ளார். அப்படி என்றால் அவங்கள வச்சே படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என என்று நயன்தாரா கூறிவிட்டாராம்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின் நடித்திருந்தார். ஜாக்லின் வயதில் இளமையானவர் என்பதால் நயன்தாராவுக்கும், இவருக்கும் அவ்வளவாக வேறுபாடு தெரியவில்லை. ஆனால் வாணி போஜன், ஜாக்லினை விட சீனியர் என்பதால் ரசிகர்களுக்கு தன் வயது தெரிந்து விடுமோ என்ற பயத்தில் நயன்தாரா வாணி போஜனை மறுத்து விட்டாரோ என்னவோ.

Trending News