திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா.. தேன்நிலவு சென்றதால் வந்த வினையா!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது திரையுலகில் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் கடந்த ஜூன் மாதம் மிகவும் விமரிசையாக திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்களுடைய தேன்நிலவை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பி இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திடீரென வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன் குட் நியூஸ் சொல்ல போறாங்களா என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால் நல்ல செய்திக்கு பதிலாக பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் ஒரு செய்தி வந்துள்ளது. ஏனென்றால் நயன்தாரா தன்னுடைய கணவர் சமைத்த உணவை சாப்பிட்டதால் தான் வாந்தி எடுத்துள்ளாராம். அந்த உணவு அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்திய காரணத்தால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு சென்ற நயன்தாரா சில மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்பியிருக்கிறார். தற்போது அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் நயன்தாரா சீக்கிரமாக நலமடைய வேண்டும் என்று சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார். தற்போது தேனிலவை முடித்துவிட்டு திரும்பி இருக்கும் அவர் மீண்டும் தன்னுடைய பட வேலைகளில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Trending News