நயன்தாரா இன்று சினிமாவில் ஒரு உச்சத்தை அடைந்து விட்டார். ஆனால் கவின் இப்பொழுதுதான் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இவ்விருவருக்கும் மேனேஜராக செயல்பட்டு வருபவர் குபேந்திரன். இப்பொழுது இவரால்தான் கவினுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
2012 பீட்சா படத்தில் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார். அந்த படத்தில் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக அடி எடுத்து வைத்தவர் இன்றுவரை 10 படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலாக ஹீரோ கதாபாத்திரம் நேற்று நடித்த படம் “நட்புன்னா என்னன்னு தெரியுமா”
இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்றார்.லிப்ட், டாடா , ஸ்டார், பிளடி பக்கர் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார் .இதில் லிப்ட் டாடா என இந்த இரண்டு படங்களும் அவரை சினிமாவில் ஒரு முக்கியமான ஹீரோவாக மாற்றியது. ஆனால் தற்சமயம் வெளிவந்த பிளடிபக்கர் எல்லாத்தையும் கெடுத்து விட்டது.
கவின் நடிப்பையும் தாண்டி சூட்டிங் ஸ்பாட்டில் பல அலப்பறைகள் செய்து வருகிறாராம். குறிப்பாக சினிமாவில் தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் மற்றவரிடம் காட்டிக் கொள்கிறாராம். பாடல் காட்சிகளுக்கு நானேகோரியோகிராப் அமைகிறேன் என சமீபத்தில் கூட ஒரு டான்ஸ் மாஸ்டர் இடம் மல்லு கட்டி உள்ளார்.
இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இவருக்கு மேனேஜராக செயல்பட்டு கொண்டிருப்பவர் குபேந்திரன். இவர்தான் இப்பொழுது அலட்சியமாக செயல்பட்டு வருகிறாராம். கவினை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். குபேந்திரன் மூலமாகத்தான் கவினை அணுக வேண்டுமாம். ஆனால் குபேந்திரன் போன் பண்ணினால் எடுப்பதே கிடையாதாம்.