வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தனுஷின் மொத்த இமேஜையும் சாக்கடையில் போட்டு முக்கிய நயன்தாரா.. வஞ்சகத்துடன் விக்னேஷ் சிவன் செய்த ராஜதந்திரம்

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் பத்து வருடங்கள் பயணித்து வருகிறார். 2004 ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய காலடியை பதித்தார். அதன் பின் அவருக்கு வாய்ப்புகள் அமையாவிட்டாலும் சுதாரித்துக் கொண்டு தன் கேரியரை பலப்படுத்திக் கொண்டார்.

இப்படி நாட்கள் செல்ல செல்ல தனுஷின் ஒண்டர் பார் நிறுவனத்தின் தயாரிப்பில் “நானும் ரவுடிதான்” என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா கமிட்டானார். விஜய் சேதுபதி தான் இந்த படத்தின் ஹீரோவா நடித்திருந்தார். இப்போதுதான் ஆரம்பித்தது உண்மையான பிரச்சனை.

இந்த படம் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கொண்டிருக்கும் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது. அப்படி ரெக்க கட்டி பறந்த விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதில் கோட்டை விட்டுவிட்டு காதலில் முழு கவனத்தை செலுத்தினார். இந்த படத்திற்கான பட்ஜெட்டையும் 10 கோடிகள் வரை உயர்த்தினார்.

ஒரு கட்டத்தில் தனுஷ் பட்ஜெட் அதிகமாகிறது என்று இந்த படத்தை ட்ராப் செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அதன்பின் எப்படியோ இந்த படத்தை முடித்து விட்டார். அப்போதே இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும், விக்னேஷ் சிவன் உண்மையாக தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளார்.

இப்படி தனுசை படாதபாடு படுத்தி விட்டு காதலை வளர்த்த அவர்கள் இப்பொழுது கல்யாண வீடியோவை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதில் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய காட்சிகள் அனைத்தும் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து சுட்டவை. இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற தனுஷ் அமைதியாக இருந்தார்.

இப்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கல்யாண வீடியோவை வெளியிடுவதற்காக அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். இப்பொழுது தனுஷ் செக் வைத்துள்ளார். பல அரசியல்வாதிகள் தனசை மிரட்டியபோதிலும் எதற்கும் அசராமல் தனுஷ் போராடி வருகிறார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நல்லவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.

Trending News