நயன்தாரா தற்போது ஜவான் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது எக்கசக்கமாக இருக்கிறது.
வரும் ஜூன் மாதத்தில் இப்படம் ரிலீஸாக இருப்பதால் தற்போது இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே நயன்தாரா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மும்பையில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அது குறித்த பல போட்டோக்கள் மற்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
Also read: நயன்தாரா, சமந்தா எல்லாம் பின்ன போங்க.. சைலன்டாக வளர்ந்து வரும் சீரியல் நடிகை
அதற்காக அவர் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தபோது யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் அனைவருக்கும் காத்திருந்தது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர்களின் தோளில் சுகமாக தூங்கும் குழந்தைகள்

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மீடியாக்கள் குழந்தைகளின் முகத்தை எப்படியாவது படம் பிடித்து விட வேண்டும் என்று அவர்களை சுற்றி சுற்றி வந்தனர். ஆனால் நயன், விக்கி இருவரும் குழந்தைகளின் முகத்தை மறைத்தபடியே தான் நடந்து வந்தனர். இருப்பினும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் தோளில் சுகமாக தூங்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.
குழந்தை முகத்தை மறைத்தபடி வந்த நயன்

அதில் 2 ஆண் குழந்தைகளும் கருப்பு நிற டி ஷர்ட் மற்றும் சிவப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்திருந்தது பார்க்க அவ்வளவு க்யூட்டாக இருந்தது. அவர்களை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஒட்டு மொத்த மீடியாவும் முயற்சி செய்தது. ஆனால் நயன்தாரா அவர்களை எல்லாம் நாசுக்காக ஒதுக்கிவிட்டு ஏர்போர்ட்டுக்குள் சென்றார். இருப்பினும் அவர் முகத்தில் இருந்த அந்த பூரிப்பும், சந்தோஷமும் குழந்தைகளை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை சொல்லாமலே சொல்லியது.
குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்த நயன்-விக்கி

கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட விக்கி, நயன் இருவரும் சில மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆன செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்ட அவர்கள் சில விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருவது பார்ப்பவர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Also read: 20 கோடி வாங்கிட்டு டகால்டி கொடுத்த நயன்தாரா.. அடி மேல அடி மேல அடி வாங்கும் ஜோடிகள்