சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தோழி மகனால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.. கூட்டத்தில் வந்த சலசலப்பு

என்னை அக்கா என்று கூப்பிடு ஆன்ட்டி லாம் சொல்லக்கூடாது என நடிகை நயன்தாரா கூறிய பதிவு சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரமாண்டமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்த நிலையில், நயன்தாராவின் ஆடை, ஆபரணங்கள் பெருமளவில் பேசப்பட்டது. 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், வைடூரியம், மரகதம் மாலைகள், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரம் என நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக அமைந்தது.

இதனிடையே தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மறு வீட்டிற்காக தனது சொந்த ஊரான கேரளாவில் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நயன்தாராவை பார்ப்பதற்காக அவருடன் பள்ளியில் படித்த தோழி ஒருவர் தன் மகனுடன் நயன்தாராவின் வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அப்போது தன் தோழியின் மகனிடம் நயன்தாரா பேசிக்கொண்டிருக்கும்போது அந்த சிறுவன் வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டி ஆன்ட்டி என்று நயன்தாராவை அழைத்துள்ளார். இதனால் சற்று கடுப்பான நயன்தாரா, தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்ட்டி எல்லாம் சொல்லக்கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளார்.

இதனிடையே அச்சிறுவன் தனது தாயிடம் சென்று, இதனை சொல்ல நயன்தாராவின் தோழி சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில் தற்போது தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் அவருடன் படித்த தோழிகள் அனைவரும் காலாக்காலத்தில் திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களது பிள்ளைகளும் வளர்த்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா தனது வயதை நினைக்காமல் தான் ஒரு நடிகை, எனக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். எனவே தற்போது தன்னை ஆன்ட்டி என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது என எண்ணி தன் தோழியின் மகனிடம் அக்கா என்று அழைக்குமாறு சொன்னது அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Trending News