திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.. சுயமரியாதை காசு கொடுக்குமா, பாலிவுட் வாய்ப்பு முக்கியம் பிகிலு

Nayanthara appologize letter: கால் வைக்குற இடம் எல்லாம் கன்னிவெறி வச்சா எப்படி என்ன வடிவேலு ஒரு நகைச்சுவையில் கேட்டிருப்பார். அது இப்போது நடிகை நயன்தாராவுக்குத்தான் சரியாக பொருந்தும். நயன்தாராவுக்கு திருமணம் ஆனதிலிருந்து கெட்ட நேரம் பிடித்து ஆடுகிறதா என்று தெரியவில்லை, அவர் கை வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை தான் வெடித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் அன்னபூரணி படம் வரை எல்லாமே நயன்தாராவுக்கு சர்ச்சை தான்.

மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவனும் அடிமேல் அடிதான் வாங்கிக் கொண்டிருக்கிறார். அஜித்தின் படம் கைநழுவி போனது, கமல் தயாரிக்க நினைத்து கைவிட்ட படம், எல்ஐசி என்ற தலைப்புக்கு ஏற்பட்ட சிக்கல் என அவரும் நொந்து போய் தான் இருக்கிறார். போதாத குறைக்கு அன்னபூரணி பட சர்ச்சை போலீஸ் கேஸ் வரை சென்று அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நாள் தான் நடிக்கிறது என இப்போது நயன்தாரா சர்ச்சைக்கு பதிலாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். படம் ஒரு குறிப்பிட்ட மத உணர்வை புண்படுத்தி இருப்பதற்காக, அந்தப் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா மன்னிப்பு கேட்டது எல்லாம் சரிதான் என்றாலும், உண்மையிலேயே மன்னிப்பு கேட்கும் விதத்தில் தான் அந்த பிரச்சனை இருக்கிறதா, அவர் மன்னிப்பு கேட்ட விதம் ஏன் இப்படி இருக்கிறது என இப்போது சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read:விக்னேஷ் சிவன் திரும்புற இடமெல்லாம் கன்னி வெடி தான்.. இதுல நயனை வேற கழட்டிவிட்ட கொடுமை

அறிக்கையின் முழு விவரம்

தன்னுடைய அறிக்கையில் நயன்தாரா, இந்த அறிக்கையை நான் சுய விருப்பத்துடன் வெளியிடுகிறேன், இந்த படம் வியாபார நோக்கம் என்பதை தாண்டி நல்ல எண்ணத்தை மக்களிடையே கொண்டு சென்று ஊக்கம் அளிப்பதற்காகவே எடுக்கப்பட்டது. நேர்மறையான கருத்தை தெரிவிக்க நினைத்த நாங்கள், எங்களுக்கு தெரியாமலேயே சிலரின் மனதை புண்படுத்தி இருப்பதை உணர்ந்தோம். தணிக்கை குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட படம், ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பது நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.

கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டு, எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் கண்டிப்பாக எந்த உள்நோக்கத்துடனும் இதை செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் கண்டிப்பாக அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் உத்வேகமும், ஊக்கத்தையும் அளிப்பதுதான் மட்டுமே தவிர யாரையும் புண்படுத்துவது இல்லை. என்னுடைய 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையின் நோக்கம் நேர்மறையான எண்ணங்களை பரப்புவது மற்றும் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது மட்டும்தான் என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

நயன்தாரா இந்த அறிக்கையின் ஆரம்பத்தில் ஜெய்ஸ்ரீராம் என குறிப்பிட்டு இருப்பது தற்போது நெட்டிசன்களால் அதிக விமர்சனத்தை பெற்று வருகிறது. சுயமரியாதையை விட்டுவிட்டு, சினிமா சுதந்திரத்தை காப்பாற்றாமல் நயன்தாரா இப்படி மன்னிப்பு கேட்டிருப்பது, ஈகோ பார்த்தால் எல்லாம் சம்பாதிக்க முடியாது, மன்னிப்பு கேட்டால் தான் அடுத்து பாலிவுட் பட வாய்ப்பு கிடைக்கும் என முடிவு செய்திருப்பது போல் தெரிவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Annapoorani (2)
Annapoorani (2)

Also Read:பிரதீப்பின் 3 படங்களும் திருட்டு பிரச்சனை.. விக்னேஷ் சிவன் கூட்டணியிலும் தொடரும் பஞ்சாயத்து

- Advertisement -spot_img

Trending News