வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நயனின் கல்யாண கேசட்டை கண்டுக்காத ரசிகர்கள்.. ராஜ தந்திரங்கள் அத்தனையும் வீணாகிவிட்டதே!

Nayanthara: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நம் ராஜதந்திரங்கள் அத்தனையும் வீணாகி விட்டதே என்று சொல்லி இருப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் நடிகை நயன்தாரா தற்போது இருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய டாக்குமென்டரி படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்பது நயன்தாராவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.

அதனால் தான் தனுஷை விளம்பரத்திற்காக ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டார் என்று கூட சமூக வலைத்தளங்களில் அவர் மீது புகார் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று வெளியான நயன்தாரா Beyond The Fairy Tale என்ற டாக்குமென்டரி அந்த அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை.

கல்யாண கேசட்டை கண்டுக்காத ரசிகர்கள்

மேலும் இது ஒரு டாக்குமென்டரி வகையிலேயே இல்லை எனவும் சிலர் தங்களுடைய விமர்சனத்தை சொல்லி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நயன்தாராவின் ரசிகர்கள் தொடங்கி இருக்கும் பக்கங்களைத் தவிர வேறு யாருமே இதைப்பற்றி பேசவில்லை.

தனுஷ்- நயன்தாரா பஞ்சாயத்து வைரலான அளவுக்கு கூட இந்த டாக்குமென்டரி பேசப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் நயன்தாரா இந்த டாக்குமெண்டரியில் எல்லாமே தன் பக்க நியாயம் என்ற போக்கில் சில விஷயங்களை பேசி இருக்கிறாராம்.

அதிலும் தன்னுடைய இரண்டாவது காதல் மற்றும் அந்த காதலர் கொடுத்த அழுத்தம் போன்றவற்றை பேசி இருக்கிறார். முன்னாள் காதலரை அவர் கொடுத்த அழுத்தத்தை பற்றி பேசிய நயன்தாரா ஏன் அந்த காதலரை அவருடைய மனைவியிடம் இருந்து பிரித்தார் என்பதை பற்றி விளக்கம் கொடுத்திருக்கலாமே என்பது சிலரின் கேள்வியாகவும் இருக்கிறது.

அதுவும் விக்னேஷ் சிவன் பேச ஆரம்பிக்கும் வினாடியில் இருந்து வீடியோ ரொம்ப கிரிஞ்சாக இருப்பதாகவும் விமர்சனம் செய்கிறார்கள். ஏதோ நயன்தாராவிடம் கணவராக வேலை செய்வது போல் விக்னேஷ் சிவன் பேசுகிறார் என்று கூட கிண்டல் அடிக்கப்படுகிறது.

தன்னுடைய சொந்த கதையை சொல்லியே எதுவும் ரீச் ஆகவில்லை என்னும் பட்சத்தில் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்துவிட்டது என்பது நன்றாக தெரிகிறது எனவும் கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகிறது.

Trending News