புதன்கிழமை, நவம்பர் 13, 2024

லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா என்றாலே பேரழகி தானே!. படம் ரேஞ்சுக்கு வெளியான ட்ரெய்லர்

Nayanthara: நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண சமயத்தில் அவர்களுடைய கல்யாண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்த விஷயம் கிணற்றில் போட்ட தள்ளாகவே இருந்து வந்தது.

மேலும் இதில் நானும் ரவுடி தான் படம் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் வருவதால் தனுஷ் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்தான் இழுத்தடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த வீடியோ வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகின.

படம் ரேஞ்சுக்கு வெளியான ட்ரெய்லர்

இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இவர்களுடைய திருமண வீடியோவை டாக்குமென்டரி ஆக வெளியிட இருக்க என்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற குரலுடன் ஆரவாரம் தெறிக்க நயன்தாரா நடந்து வருவது போல் இந்த வீடியோ ஆரம்பிக்கிறது.

இதைத் தொடர்ந்து நாகார்ஜுனா, ராதிகா, அட்லி, நெல்சன், டாப்ஸி என்று பல திரைப்பட நட்சத்திரங்களும் நயன்தாராவை பற்றி இந்த வீடியோவில் பேசி இருக்கிறார்கள். இவர்கள் பேசி முடிந்ததும் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதலை பற்றி பேசுகிறார்.

இப்படி ஒரு கல்யாணத்தை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது, ஆனால் அது எனக்கே நடந்திருக்கிறது என ரொம்பவும் பெருமிதமாக சொல்கிறார். மேலும் நயன்தாரா என்றாலே பேரழகி என தன்னுடைய காதல் மனைவியை வர்ணிக்கிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விளையாட்டாக பேசி சிரித்து கொள்வது போன்ற கிளிப்புகளும் அந்த வீடியோவில் இருக்கிறது. இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டதால் நயன்தாரா நயன்தாரா beyond the fairy tale என்னும் டாக்குமென்ட்ரி வீடியோவை பார்க்க பலரும் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News