வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

குடும்பம் பெரிதானதால் நயன்தாராக்கு வந்த பேராசை.. டொயோட்டா கம்பெனிக்கு கொடுத்த மெகா ஆடர்

நயன்தாரா பல கண்டிஷன்களை போட்டு சினிமாவில் நடித்து வருகிறார். குடும்பத்திற்காக சினிமாவை இரண்டாம் இடத்தில் தான் வைத்திருக்கிறார். சென்னையில் மட்டுமே சூட்டிங்கில் கலந்து கொள்கிறார். வெளியிடங்கள் படப்பிடிப்பு வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு ஆடர் போடுகிறார்.

வீட்டில் இரண்டு நர்சிங் தெரிஞ்ச வேலையாட்களை பணியில் வைத்திருக்கிறார். தான் இல்லாத நேரத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், அவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் என்றால் கவனித்துக் கொள்ளவும் தான் இந்த மருத்துவம் தெரிந்த வேலையாட்கள்.

கணவர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, மற்றும் அவர்கள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த இரண்டு குழந்தைகள், வீட்டின் வேலையாட்கள் மூன்று பேர் என மொத்தம் அவர்கள் 7 உறுப்பினர்களும் ஒரே பிளாட்டில் தான் வசித்து வருகிறார்களாம். எக்மோரில் உள்ள ஹைரைஸ் அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்கள்.

டொயோட்டா கம்பெனிக்கு கொடுத்த மெகா ஆடர்

இவர்கள் ஒன்றாக வெளியில் செல்வதற்கு ஏற்றார் போல் இப்பொழுது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 2 கோடிகளில் அனைவரும் செல்லக்கூடிய டொயோட்டா வெல்ஃபையர் என்ற காரைத்தான் வாங்கி இருக்கிறார். இந்த காரில் இல்லாத வசதிகளே இல்லையாம். ஏற்கனவே நயன்தாராவிடம் பிஎம்டபிள்யூ, ஜாக்குவார் போன்ற கார்கள் இருக்கின்றது

9 முதல் 10 ஆட்கள் இந்த காரில் மிகவும் சொகுசாக பயணிக்கலாம். ஏற்கனவே இந்த வாகனம் பல வசதிகளுடன் களம் இறங்கியுள்ளது. இதில் நயன்தாரா டொயோட்டா கம்பெனியிடம் சிறிது மாறுதல்களை செய்து தருமாறு கேட்டு வாங்கி இருக்கிறார். கருப்பு நிறத்தில் வாங்கியுள்ள அந்த கார் ரதம் போல் காட்சியளிக்கிறது.

Trending News