சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரஸ்மீட்டில் பதறி போன நயன்தாரா.. இப்படி பண்ணினா எப்படி பாஸ்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இவர்களது திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது.

மேலும், அந்நியர்கள் யாரும் வரக்கூடாது என மும்பையிலிருந்து பவுன்சர்கள் திருமணத்திற்கு பாதுகாப்பாக வரவழைக்கப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு மறுநாள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தனர்.

மேலும் திருப்பதி கோயிலுக்கு வந்த பக்தர்கள் நயன் மற்றும் விக்கியை பார்த்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதிலிருந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருவதற்கு படாதபாடுபட்டனர்.

கோயிலுக்குள் நயன்தாரா செருப்பு அணிந்திருந்ததால் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தவறுதலாக செருப்பு அணிந்து விட்டோம் என விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டிருந்தார். அதற்கு மறுநாள் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பிரஸ்மீட்டில் கலந்துகொண்டனர்.

எல்லோரும் இந்த புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் பிரஸ்மீட் முடிந்த பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பவுன்சர்கள் பாதுகாப்பாக வெளியில் அழைத்து சென்றனர்.

அப்போது கூட்ட நெரிசலில் பவுன்சர் ஒரு செய்தியாளர் மீது தவறி விழுந்தார். இதை பார்த்த நயன்தாரா ஒரு நிமிடம் உடனே பதறிப்போனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள வைரலாக பரவி வருகிறது. இதே போன்று பெரிய பிரபலங்கள் பலரும் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் எப்போதுமே சூழ்ந்து கொள்கிறார்கள்.

Trending News