Nayanthara celebrated Valentine’s Day: காதலை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக காத்திருந்த ஒவ்வொருவரும் இன்று கோலாகலமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
விக்கியுடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோ

காதலர்கள் தான் இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை உணர்த்தும் பொருட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன் தன் உயிர் உலகத்துடன் கொண்டாடி இருக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
Also read: நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம்.. பட்ட அவமானத்திற்கு 7 வருடங்களாக பழி வாங்கும் ஸ்டைலிஷ் ஹீரோ
அதில் அவர் தன் மகன்களை கட்டியணைத்து கொஞ்சும் போட்டோக்கள் பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட் ஆக இருக்கிறது. அதே போன்று விக்கியுடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
உயிர் உலகத்துடன் நயன்தாரா

காதலை அடையாளப்படுத்தும் சிவப்பு நிற ரோஜாக்களுக்கு மத்தியில் தன் கணவர் பிள்ளைகள் என மகிழ்ச்சியோடு இருக்கிறார் நயன்தாரா. அந்த போட்டோக்கள் தான் இப்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
Also read: கல்யாணம் ஆனாலும் மவுஸ் குறையாமல் சுற்றும் நயன்தாரா.. திரிஷாவை ஓரங்கட்ட கமிட்டான 6 படங்கள்
இன்றைய தினத்தில் அமலாபால் உட்பட பல ஹீரோயின்கள் தங்களுடைய காதலர் தின போட்டோவை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் இருக்கிறது நயனின் ஸ்வீட் குடும்ப புகைப்படங்கள்.
நயன்தாரா கொண்டாடிய காதலர் தினம்

இதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதோடு கண்ணு பட்டுரும், சுத்தி போடுங்க எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த புகைப்படங்களில் உயிர், உலகம் இருவரும் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.
காதலர் தின புகைப்படங்கள்
