ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த ஆபத்து.. அடி மேல் அடி வாங்கி வழிக்கு வந்த நயன்

Actress Nayanthara: ஆரம்பகால கட்டத்தில் நயன்தாரா வழக்கமான ஹீரோயின்கள் போல் டூயட் பாடுவது, ஒரு சில காட்சிகளில் தலை காட்டுவது என்று தான் நடித்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்த அவர் கதையின் நாயகியாக மாறினார்.

அதுவே அவருக்கான வெற்றியை கொடுத்ததோடு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தையும் தேடி தந்தது. அதிலிருந்தே பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகள் என்றாலே நயன் தான் ஞாபகத்துக்கு வருவார். அந்த அளவுக்கு அவர் அந்த கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்திப் போனார்.

அதன் காரணமாகவே அவர் தன்னுடைய சம்பளத்தை ஹீரோவுக்கு நிகராக உயர்த்தியதோடு, ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என்றெல்லாம் கெத்து காட்டினார். ஆனால் இப்போது அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கே பெரும் ஆபத்து வந்துவிட்டது.

Also read: 2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி

ஏனென்றால் சமீபத்தில் அவர் நடித்திருந்த ஜவான் படத்தை தவிர மற்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் வெற்றியை பெறவில்லை. அதனாலேயே அவர் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் அவர் நடித்த அன்னபூரணியின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டு படத்தை ப்ரோமோஷன் செய்தார். அது மட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் பிரியாணியையும் பரிமாறி ஆச்சரியப்படுத்தினார். பொதுவாக நயன் இப்படி எல்லாம் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டார்.

ஆனால் அடிமேல் அடி வாங்கினால் அம்மியும் நகரும் என்ற கதையாக இப்போது அவர் வழிக்கு வந்து விட்டார். தொடர் தோல்விகளை பார்த்து அரண்டு போன நயன் தன்னுடைய லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள இப்போது படம் தொடர்பான ப்ரமோஷன்களுக்கு அவர் மறுப்பு சொல்வதே கிடையாதாம்.

Also read: புயலால் வலுவிழந்த நயன்தாராவின் அன்னபூரணி.. தரமான 3 படங்களும் சோகத்தில் மூழ்கிய சம்பவம்

Trending News