மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்ஜே பாலாஜி எடுப்பதாக இருந்தது. ஆனால் அது இன்று வரை கை கூடுவதாக தெரியவில்லை. முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா இந்த படத்திற்கு ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறார். கிட்டத்தட்ட 15 கோடிகள் வரை டீல் பேசி வருகிறார்
இப்பொழுது அந்தப் படத்தை கை உதறிவிட்டு, பாலாஜி மாசாணி அம்மன் படத்தை எடுக்க சென்று விட்டார். இதை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்ககப் போகிறார். ஏற்கனவே முதல் பாகம் வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன்.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இனிமேல் எடுக்க முடியாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாலாஜியிடம் கேட்டுள்ளார். ஆனால் முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா இதற்கு ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறார். படத்தின் பட்ஜெட்டை விட அவருக்கு அதிகமாய் கொடுக்க வேண்டியதாக உள்ளது.
கெத்தா சுற்றுப்போடும் சுந்தர் சி
இப்பொழுது இந்தப் படம் ஆர் ஜே பாலாஜியின் கைவசம் இல்லை. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை சுந்தர் சி இடம் ஒப்படைத்து விட்டார். அதனால் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். ஏற்கனவே அவர் அரண்மனை ஐந்தாம் பாகத்துக்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஆர்.ஜே பாலாஜி மாசாணி அம்மன் படம் எடுக்க சென்று விட்டதாலும், நயன்தாரா பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாலும் இப்பொழுது இந்த படம் கை மாறியுள்ளது. அரண்மனை 5 ஐந்தாம் பாகத்தை முடித்துவிட்டு சுந்தர் சி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
- சுந்தர் சி-யால் மீண்டு வந்த கோலிவுட்
- அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி
- ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி