அட, குரங்கு வாயனுங்களா! 3 பேரை கடிச்சி வச்ச நயன்தாரா.. இனிதான் Exclusive ஆரம்பம்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நடிகருக்கு நிகராக எந்த நடிகையும் பேசப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் பல வருடங்கள் நிலைத்தும் நிற்பதில்லை. ஆனால் இதெல்லாம் உடைத்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார் நயன்தாரா.

இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் தனது திருமண வீடியோவை netflix-ல் விற்ற காரணத்தினால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

‘நயன்தாரா த ஃபேரி டேல்’ என்று netflix-ல் வெளியான டாக்குமெண்ட்ரி ஃபிலிமில் நானும் ரவுடிதான் படத்தின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் காட்டப்பட்டது.

என்னிடம் அனுமதி பெறாமல் இந்த காட்சியை எப்படி பயன்படுத்தினீர்கள் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அவர்கள் கோபப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனை சிறிதும் எதிர்பாராத நயன்தாரா கடுப்பாகி தனுசை எக்ஸ் தளத்தில் கண்ணா பின்னா என்று பேசி விட்டார்.

இது நாளடைவில் வலைப்பேச்சு என்ற youtube சேனலில் மிகப்பெரும் பேசு பொருளாகியது. வலைப்பேச்சு நிகழ்ச்சியில் மூன்று பேர் பேசி வந்தனர். ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்ல அது நயன்தாராவுக்கு எரிச்சலை கிளப்பியது.

இதை மனதுக்குள்ளே வைத்து சுற்றிக் கொண்டிருந்த நயன்தாரா டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது வலைப்பேச்சு குழுவினரை குரங்குகள் என்று விமர்சித்தார்.

அவர் எப்படி விமர்சித்தார் என்றால் ‘நமக்கு மூன்று குரங்குகள் தெரியும் ஒன்று கெட்டதை பார்க்காது, ஒன்று கெட்டதை கேட்காது, ஒன்று கெட்டதை பேசாது. ஆனால் இங்கே ஒரு மூன்று குரங்குகள் இருக்கின்றன.

கெட்டதை மட்டும் தான் பேசும், கெட்டதை மட்டும்தான் பார்க்கும், கெட்டதை மட்டும்தான் கேட்கும். ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் மூவரும் ஒரு உதாரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.

கூடிய விரைவில் வலைப்பேச்சு சேனலில் பல விரைவு செய்திகள் வரலாம் என நெட்டிசன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner