Nayanthara : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமண வீடியோவை ஒரு டாக்குமெண்டரியாக நெட்பிளிக்ஸ் வெளியிட திட்டமிட்டிருந்தது.
இதற்காக நயன்தாராவுக்கு பெரிய தொகையும் பேசப்பட்டிருந்தது. இந்த டாக்குமெண்டரியை படமாக கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலுக்கு உறுதுணையாக இருந்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் டாக்குமெண்டரியில் நானும் ரௌடி தான் படக் காட்சிகள் 3 நிமிடங்கள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த கிளிப்சை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த நயன்தாரா



இதனா ல்தான் இரண்டு வருடம் தாமதமாகியும் இந்த டாக்குமெண்டரி வெளியாகாமல் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அதோடு உங்களைப் போன்று சினிமா பின்னணியில் இருந்து வந்தவள் நான் இல்லை. ஆவணப்படம் வெளியாக கூடாது என்கின்ற நோக்கத்தில் இப்படி செயல்படுகிறீர்கள்.
வெறும் மூன்று செகண்ட் வீடியோவுக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்பது சரியா என தனுசுக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். பல வருடமாகவே தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை போய்க்கொண்டு இருப்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
சரியான நேரத்தில் தனுஷ் பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுகிறது. மேலும் கோலிவுட் வட்டாரத்தில் இப்போது இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா ஆவணப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.