வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்

நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கனெக்ட். இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் கனெக்ட் படத்தை இயக்கியுள்ளார். திகில் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகவும் துணிச்சல் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வினய் நடித்துள்ளார்.

Also Read : மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வரும் நயன்தாரா.. ப்ரீமியர் ஷோ படம் எப்படி இருக்கு.? விமர்சனம்

மேலும் இந்த படம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தான் கனெக்ட் படத்தை எடுத்துள்ளனர். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபத்தை இப்படம் பார்த்துள்ளது.

அதாவது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கனெக்ட் படத்தை கிட்டத்தட்ட 15 கோடிக்கு வாங்கி உள்ளதாம். இந்நிலையில் நாளை தமிழகத்தில் முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் தியேட்டரிலும் நல்ல லாபம் பெரும் என்று கூறப்படுகிறது.

Also Read : லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா

நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிப்பதால் தீயாய் பிரமோஷன் செய்து வருகிறார். பொதுவாக எவ்வளவு பெரிய நடிகர் படத்தில் நடித்தாலும் அஜித் போல நயன்தாரா எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்.

மேலும் படம் கமிட் ஆகும்போது ப்ரோமோஷனில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஒப்பந்தமும் செய்திடுவார். ஆனால் கனெக்ட் படத்திற்காக தனது கொள்கையை விட்டு இறங்கி ப்ரோமோஷனில் தீவிரம் காட்டி வருகிறார். நயன்தாரா ரசிகர்கள் தற்போது கனெக்ட் படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : 2022ஆம் ஆண்டில் குழந்தை குட்டியுமாக மாறிய 5 நடிகைகள்.. சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் வாடகைத்தாய் ட்வின்ஸ் பேபி

Trending News