Nayanthara: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் இப்போது நயன்தாரா செய்து கொண்டிருக்கிறார்.
இங்க அடிச்சா, அங்க வலிக்க வேண்டும் என்பது போல் மொத்தமும் விக்கி பக்கம் ரிவிட் ஆகி கொண்டு இருக்கிறது.
நயன்தாரா மீது சினிமா ரீதியான விமர்சனங்கள் மற்றும் அவருடைய கடந்த கால வாழ்க்கை விமர்சனங்கள் கொஞ்சம் அதிகம் தான்.
அடி விக்னேஷ் சிவனுக்கு விழுகுதே
ஆனால் நயன் மற்றும் விக்கி என்று வந்து விட்டால் இந்த ஜோடியை எல்லோரும் கொண்டாட தான் செய்வார்கள்.
அதே போன்று தான் திருமண வாழ்க்கையும் கொண்டாடப்பட்டது. அஜித்தின் படம் விக்கி கை தவறி போனபோது ஜெனரஞ்சகமான ரசிகர்கள் அத்தனை பேருமே வருத்தப்பட்டார்கள்.
ஆனால் நயன்தாரா முதல் முதலாக தனுஷுக்கு எதிராக அறிக்கை விட்டதும் இது தலைகீழாக ஆனது. நயன்தாராவை தாண்டி அத்தனை பேரும் குறி வைத்தது விக்னேஷ் சிவனை தான்.
இது அவர் ட்விட்டர் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு போகும் அளவுக்கு வந்துவிட்டது. நயன்தாரா சமீபத்தில் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதில் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை மூன்று குரங்குகள் என்று விமர்சித்து இருக்கிறார்.
வலைப்பேச்சு சேனலில் இருப்பவர்களை பொருத்தவரைக்கும் தங்களை எதிர்ப்பவர்களை இறங்கி அடிக்க தயங்க மாட்டார்கள்.
அப்படித்தான் நயன்தாரா விஷயத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். நயன்தாராவை தாக்குவதை விட விக்கியை தாக்கினால் நயனுக்கு வலிக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு சேனல் பிஸ்மி, புஷ்பா புருஷன் போல் நயன்தாரா புருஷன் என்று சொன்னால் தான் விக்னேஷ் சிவனை எல்லோருக்கும் தெரிகிறது.
அவருக்கு சொந்தமாக அறிவு இல்லை என்பதை போல் விமர்சித்திருக்கிறார்.
நயன்தாராவாக இருக்கட்டும், வலைப்பேச்சு சேனல் பிஸ்மியாக இருக்கட்டும் விமர்சனங்கள் தகுதி தரத்தோடு இருக்கும் வரைக்கும் தான் மக்களிடம் வரவேற்பை பெறும்.