வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தீபாவளிக்கு ஆயிரம் வாலா போல் ரெடியாகும் நயன்தாரா வெடி.. அப்ஜெக்க்ஷன் ஓவர் ரூல்டு பண்ணிய தனுஷ்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திரைத்துறை தம்பதியினராக சந்தோசமாய் வாழ்ந்து வருகின்றனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா இரண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அவர்களுக்கு இரண்டு வயது ஆகியுள்ளது. அவர்களுடன் எக்மோரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கல்யாண வீடியோவை ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது நெட்பெலிக்ஸ். ஆனால் இன்று வரை அந்த வீடியோவை ஓ டி டி யில் ஒளிபரப்ப வில்லை. இந்த கல்யாண வீடியோவை கௌதம் வாசு மேனனிடம் ஒப்படைத்து அதை நேர்த்தியாக கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

வெறும் கல்யாண வீடியோவை மட்டும் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்காது என்று அவர்களுக்குள் காதல் மலர்ந்த நேரத்தையும் அந்த அழகிய காலகட்டத்தையும் சேர்த்துள்ளனர். இதற்காக தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த “நானும் ரவுடிதான்” படத்தின் சில வீடியோக்களை இதில் இணைத்துள்ளனர்.

அப்ஜெக்க்ஷன் ஓவர் ரூல்டு பண்ணிய தனுஷ்

சூட்டிங் நேரத்தில் ஸ்கிரீனுக்கு பின்னால் எடுக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து அவர்களுக்குள் காதல் மலர்ந்த காட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு வீடியோவை ரெடி செய்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தனுஷின் ட்ரீம் வாரியர் நிறுவனம் பட காட்சிகளை தொகுத்து வீடியோ தயாரிப்பதற்கு ஒத்துக்கவில்லை. இதனால் இந்த வீடியோ இன்று வரை ஒளிபரப்பவில்லை. ஆனால் தற்போது தனுஷ் தரப்பிலிருந்து “என் ஓ சி” கொடுத்து விட்டனர். அதனால் தீபாவளி அன்று நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாண வீடியோ வெளியிட திட்டம் போட்டு வருகிறது நெட்பெலிக்ஸ்.

Trending News