புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நயன்தாரா பண்ணும் ப்ளாக் மேஜிக்.. எதற்கும் அசராமல் லேடி சூப்பர் ஸ்டார் வைக்கும் பொறி 

Nayanthara does black magic without reducing her salary: லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்க உள்ளார். அவரது படங்கள் ஓடினாலும் இல்லாவிட்டாலும் சம்பளத்தை மட்டும் குறைக்காது கெத்து காட்டி வருகிறார். 

ஹரியின் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, 2010 ஆண்டுக்குப் பின் நடித்த வெற்றி படங்களின் மூலம் ஜெட் வேகத்தில் தன் சம்பளத்தை உயர்த்தியதோடு, தமிழ் சினிமாவின் டாப் ஒன் நடிகை ஆனார். 

கடந்த 2022 ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்த நயன்தாரா, வாடகை தாயின் மூலம் இரு குழந்தைகளுக்கு தாயானார். திருமணத்திற்கு பின் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவிற்கு சமீபத்திய படங்கள் ஒன்றும் கை கொடுக்கவில்லை. 

Also read: எல்லாத்துக்கும் காரணம் நயன்தாரா  வாய்தான்.. கொளுத்தி போட்டு குளிர் காயும் அற்புதமான ஜோடி

நிழல், நெற்றிக்கண், இறைவன் அண்ணாத்த போன்ற படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. படங்கள் ஓடுகிறதோ இல்லையோ அவ்வப்போது பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றனர் இந்த தம்பதியினர். 

நயன்தாரா ஹிட் கொடுத்து பல வருஷம் ஆயிடுச்சு. கடைசியா அவருக்கு ஓடுன படம்னு பார்த்தா 2020 வெளிவந்த மூக்குத்தி அம்மன் தான். கடந்த ஆண்டு வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் வசூலில் பின்னோக்கி சென்று நயன்தாராவிற்கு கொடுத்த சம்பளத்தை கூட எட்ட முடியாமல்  திணறி போனது. இவை எதற்குமே பொறுப்பேற்காமல் சம்பளத்தையும் குறைக்காமல் தயாரிப்பாளர்களை திணறடித்து வருகிறார்.

காரணம் நயன்தாராவை வைத்து படம் எடுத்தால் கவுரவம் என்று நினைக்கிறார்கள். அதை வைத்து அவர்களது பிசினஸை டெவலப் செய்கிறார்களாம். இதை நன்கு உணர்ந்து உள்ள நயன் அதிக சம்பளத்துடன் முன்னணி நடிகை ஆகவே இருக்க ஆசைப்படுகிறார். 

அதுமட்டுமின்றி அவருடைய பல பிசினஸ்களுக்கும் சினிமாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறாரே தவிர சினிமாவை மட்டுமே நம்பி இல்ல நயன்தாரா. இந்தியா மட்டுமின்றி கனடா உட்பட பல நாடுகளிலும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியிலும், சானிடரி நாப்கின் வணிகத்திலும் கொடி கட்டி பறந்து வருகிறார். பார்ட்னர் ஆக அவரது கணவரின் துணை கொண்டு 9 ஸ்கின் மற்றும் ஃபெமி 9 போன்ற பிராண்டுகளை உற்பத்தி செய்து ஆன்லைனிலும் விற்பனை செய்து கல்லா கட்டி வருகிறார்.

Also read: பிசினஸ் மூளையை வைத்து நயன்தாரா செய்த தில்லாலங்கடி.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?

Trending News