2020 மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு நயன்தாரா 12 படங்களுக்கு மேல் நடித்தாலும் எந்தப் படமும் ஓடியதாக தெரியவில்லை. காத்து வாக்குல ரெண்டு காதல், இறைவன், நிழல் என எல்லா படங்களும் பிளாப் ஆகிவிட்டது. கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும் இவருக்கு கடைசியாக வெற்றி கிடைத்த படம் என்றால் ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் தான்.
ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடிகள் வரைசம்பளம் வாங்குகிறார். ஆனால் இவர் படங்கள் வசூல் செய்வதில்லை என தயாரிப்பாளர்கள் குற்றம் கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் ஐயா படத்தில் இருந்த நயன்தாரா இல்லை. இப்பொழுது லேடி சூப்பர்ஸ்டாராக ஆலமரம் போல் தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கிறார்.
நடிக்க வந்த புதிதில் அதிக வயது ஹீரோக்களுடன் ஜோடி போட்டு சினிமா கேரியரை தொடங்கினாலும் அதன் பின் சிம்பு, தனுஷ் என இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார். இப்பொழுது இவருக்கு படங்கள் ஓடாததாலும், அதிக சம்பளம் கேட்பதாலும் தயாரிப்பாளர்கள் இவர் பக்கம் வர யோசிக்கிறார்கள்.
கௌரவத்தை விட்டு இளம் ஹீரோவுடன் பண்ணிய ரொமான்ஸ்
நயன்தாரா தற்சமயம் சம்பளத்தையும் குறைத்துக் கொண்டு வளரும் இளம் ஹீரோ ஒருவனுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் விஷ்ணு இடைவன், கவினை வைத்து ஒரு படம் இயக்குகிறார் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
படத்தில் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். முதற்கட்டமாக இருவருக்கும் இடையிலான மிகவும் நெருக்கமான ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிக்க வந்த புது சிம்புவுடன் இப்படித்தான் நடித்தார் நயன்தாரா. இப்பொழுது மீண்டும் அதையே பாலோ செய்கிறார்.
- நயன்தாரா பார்த்த வேலையா இருக்குமோ
- ஹீரோவை ஜீரோவாக்கிய நயன்தாரா புருஷர்
- 10 பவுன்சர்களுடன் நயன்தாரா செய்யும் அழிச்சாட்டியம்