நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். தனி ஒரு பெண்ணாக இருந்து தமிழ் சினிமாவையே தன் கைவசம் வைத்துள்ள நடிகை இவர்தான். பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகையும் இவர்தான்.

ஆனால் நயன்தாரா கடந்த பல ஆண்டுகளாக தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வது இல்லை. அதேபோல் பத்திரிகைகள், தொலைக்காட்சி என எதற்கும் பேட்டியளிப்பதில்லை. இதுமட்டுமின்றி நயன்தாராவிற்கு எந்த சமூக வலைதளங்களிலும் அக்கவுண்ட் கிடையாது. எனவே படங்களில் மட்டுமே அவரை, ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை நயன்தாரா விஜய் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியில் நயன்தாரா விருந்தினராக பங்கேற்று பேட்டி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி நயன்தாரா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது நயன்தாரா அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முழு ப்ரோமோ வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

nayanthara-vijay-tv
nayanthara-vijay-tv

இதுதவிர ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஒரு புதிய படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.