Nayanthara: சமீப காலமாக நயன்தாரா பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். தனுஷை விமர்சித்ததில் தொடங்கி சமீபத்தில் மதுரையில் நடந்த விழா வரை எல்லாமே பரபரப்பு தான்.
அது மட்டும் இன்றி இப்போதெல்லாம் அவருடைய ஆட்டிட்யூட் அதிகமாகவே இருக்கிறது. பணம் புகழ் இதில் மட்டுமே அவருடைய கவனம் இருப்பதாக திரையுலகில் வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது.
அதிலும் திருமணத்திற்கு பிறகு தான் அவருடைய ஆட்டம் அதிகமாகி விட்டது. இதற்கு விக்னேஷ் சிவன் தான் காரணம் என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் நயன்தாராவின் சகாப்தம்
தற்போது அவர் பிஸ்னஸ் போட்டோ ஷூட் வெளிநாடு ட்ரிப் என என்ஜாய் செய்து வருகிறார். இதனால் நடிப்பில் அவருடைய கவனம் குறைந்து விட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
மேலும் தற்போது அவர் நடித்து வரும் படம் இன்னும் பிசினஸ் ஆகவில்லை. அதனால் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வரப்போகிறது என தகவல் கசிந்து உள்ளது.
அதேபோல அவர் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் எந்த படமும் வெளிவருவதற்கான அறிகுறி தெரியவில்லை.
இதிலிருந்து நயன்தாராவின் திரை வாழ்வு தடுமாற்றத்தில் இருப்பது தெரிகிறது. கூடிய விரைவில் அவருடைய திரை வாழ்வின் சகாப்தம் முடிவுக்கு வரும் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.