செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Nayanthara: குழந்தையை பங்கு போட்டுக் கொண்ட விக்கி, நயன் ஜோடி.. விவாகரத்து சர்ச்சை ஓவர், அதுக்குள்ள இன்னொரு பஞ்சாயத்தா.!

Nayanthara: நயன்தாரா என்ன செய்தாலும் அது சர்ச்சையாகி விடும். அதனாலேயே அவர் பட விழாக்கள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

ஆனாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கூட சர்ச்சை வட்டத்துக்குள் தான் இருக்கிறது. அப்படித்தான் தற்போது அவர் வேற ஒரு பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன், நயன் இருவரும் பிரிய போகிறார்கள் என்ற வதந்தி காத்து வாக்கில் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் இருவரும் ஜோடியாக எடுத்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டனர்.

குழந்தையுடன் நயன்தாரா

nayanthara
nayanthara

அதை அடுத்து இப்போது மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நயன்தாரா ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு கொச்சி ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது எடுத்த போட்டோக்களும் வீடியோக்களும் இப்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் மற்றொரு குழந்தை எங்கே? விக்னேஷ் சிவனிடம் இருக்கிறதா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நயன்தாரா எல்லா போட்டோக்களிலும் ஒரே குழந்தையை மட்டுமே எப்போதும் தூக்கி வைத்திருக்கிறார் என்ற கருத்து எழுந்தது. அதை பொய்யாக்கும் வகையில் இரண்டு குழந்தைகளையும் வைத்திருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது கசிந்துள்ள இந்த வீடியோ அடுத்த விமர்சனத்திற்கு ஆளாகிறது. அப்படி என்றால் நயன்தாராவுக்கு ஒரு குழந்தையின் மீது மட்டும் பாசமா? என்று ரீதியிலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது பூதாகரமாக வெடிக்கும் நிலையில் விரைவில் நயன்தாரா வீடியோ வடிவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News