செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

40 வயதில் ஜெயித்த 3 நடிகைகளை ஃபாலோ பண்ணும் நயன்தாரா.. சுக்கிர திசையில் திரிஷா, அதிரடி முடிவில் நயன்

Actress Nayanthara: சினிமாவை பொருத்தவரை ஹீரோயினை விட ஹீரோகளுக்கு மட்டும் தான் எப்பொழுதுமே மவுஸ் அதிகமாக இருக்கும். அதை முறியடிக்கும் விதமாக ஹீரோகளுக்கு இணையாக மாஸ் காட்டி நடித்து வருபவர் தான் நயன்தாரா. அத்துடன் மற்ற நடிகைகளை விட ஒரு படி எப்பொழுதுமே எல்லாத்திலும் மேலோங்கி தான் இருக்கிறார்.

ஆனால் இவருடைய திருமணத்திற்கு பின் இவருக்கு எல்லாமே சறுக்கிக் கொண்டே வருகிறது. சரியான பட வாய்ப்புகள் வராததால் இனிமேல் தமிழுக்கு வருவது கஷ்டம் என்ற நிலைமைக்கு ஆகிவிட்டார். அதனால் தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். எப்படியும் இந்த படம் எதிர்பார்த்தபடி நன்றாக ஓடிவிடும்.

Also read: நாங்கள் ஒண்ணும் நயன்தாராவுக்கு சலச்சவங்க இல்ல.. 3 படங்களுடன் கெத்து காட்டும் நடிகை

அதன் பின் தொடர்ந்து ஹிந்தியில் ஒரு ரவுண்டு வர இருக்கிறார். அதனால் இவருடைய கவனம் எல்லாம் பாலிவுட் பக்கமே திரும்பி விட்டது. அதற்காக தற்போது மும்பையிலேயே வட்டமிட்டு வருகிறார். அதாவது கிட்டத்தட்ட 40 வயது ஆகிவிட்ட நிலையில் இனிமேல் லைஃப்ல செட்டில் ஆவது பற்றி தான் முழு கவனத்தையும் வைத்திருக்கிறார்.

இவர் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணம் பாலிவுட்டில் 40 வயதில் ஜெயித்த 3 நடிகைகளை ஃபாலோ பண்ணியதால் எடுத்த முடிவு. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஹேமமாலினி இவர்கள் ரூட்டையே கையில் எடுத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் 40 வயதிற்கு பிறகு பாலிவுட்டிற்கு சென்று நடிப்பில் ஜெயித்துக் காட்டியவர்கள். இவர்களை தொடர்ந்து தற்போது நயன்தாராவும் அதே முடிவை எடுத்திருக்கிறார்.

Also read: 2023-ல் நா தான் பெஸ்ட் என நிரூபித்த 8 நடிகைகள்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமத்து நடிகை

அத்துடன் தற்போது தமிழில் நயன்தாராவை விட அதிகமாக வரவேற்பை பெற்று வருவது த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்ததில் இருந்து இவருக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது. அந்த வகையில் விஜய்யுடன் லியோ, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படம். அடுத்ததாக தி ரோடு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இதனால் இவரை முந்த முடியாது என்ற நினைத்து நயன்தாரா தமிழ் பக்கம் வராமல் பாலிவுட்டை கதி என்று போய்விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி தமிழில் பெரும்பாலும் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகையை பெரிதாக தூக்கிக் கொண்டாட மாட்டார்கள். அப்படியே இனி தமிழில் நயன்தாரா நடித்தாலும் பத்தில் ஒரு நடிகையாக தான் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வருவார்கள்.

Also read: ஒரு வழியா முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி .. அட போங்கடா என டேக்கா கொடுத்த த்ரிஷா

Trending News