வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாரா கெட்டப்பை அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. உருவ கேலியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

விஜய் டிவி மற்ற சேனல்களை ஒப்பிடும் போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆடல், பாடல், காமெடி என இந்த சேனலில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தனித்துவமாக இருக்கும். நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்றால் இன்று நெட்டிசன்கள் விஜய் டீவியை எதிர்த்து பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கான நடன போட்டி BB ஜோடிகள் என்னும் பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்க நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடுவர்களாக இருக்கின்றனர். நேற்றைய போட்டியில் காமெடி நடிகை ஆரத்தி நடிகை நயன்தாராவின் திருமண கெட்டப்பை ரிகிரியேட் செய்து இருக்கிறார்.

Also read: எங்களால அசிங்கப்பட முடியாது.. பிக் பாஸுக்கு ஆளில்லாமல் தெருத்தெருவாக அலைய போகும் விஜய் டிவி

அவர் ஆடி முடிந்ததும் முகத்தை திறந்து காட்டும் போது முகத்தில் கரி பூசிக்கொண்டு கருப்பான பெண்ணாக காட்டியிருப்பார்கள், அப்போது எல்லாரும் சிரித்திருக்கிறார்கள். மேலும் அவர் உருவத்தை கேலி செய்யும் விதமாக பின்னிசையில் யானை பிளிறும் சத்தத்தை ஒலிபரப்பி இருக்கிறார்கள். இது இப்போது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி என்று கிடையாது, அந்த சேனலின் காமெடி நிகழ்ச்சிகளான கலக்க போவது யாரு, காமெடி சேம்பியன்ஸ் , சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகளில் இந்த உருவ கேலி இருக்கும். இதற்கு பலமுறை பார்வையாளர்களிடம் இருந்தும் , பிரபலங்களிடம் இருந்தும் கண்டனங்கள் வந்துவிட்டன. ஆனாலும் விஜய் டிவி தன் போக்கை மாற்றி கொள்ளவில்லை.

Also read: அண்ணாச்சியை வச்சி நம்மளும் சம்பாதிப்போம்.. காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை

ஆர்த்தி கணேஷ், அறந்தாங்கி நிஷா, பிரியங்கா, சூப்பர் சிங்கர் பரத், செப் தாமு, பழனி, ராமர், பாலா என பலரும் இந்த உருவ கேலியில் சிக்கி இருக்கிறார்கள். இதில் சிலர் தங்களை தாங்களே கேலி செய்து கொள்வது, கேலி செய்வது போன்ற ஸ்கிரிப்டில் சிரித்து கொண்டே நடிப்பது கொஞ்சம் முகம் சுளிக்கும் விதமாக தான் இருக்கும்.

Also read: குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்.. விஜய் டிவி செய்த தரமான முடிவு

உருவ கேலி என்பது மிகப்பெரிய குற்றமாகவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நடந்து வரும் கால சூழ்நிலையில் விஜய் டிவி இது போன்ற விஷயங்களை ஆதரிப்பது நல்லதல்ல என்பதே நெட்டிசன்கள் கருத்து. மற்ற சேனல்களை ஒப்பிடும் பொழுது இந்த சேனலில் தான் அதிகமாக உருவ கேலி நடக்கிறது என நெட்டிசன்கள் குற்றத்தை முன் வைக்கின்றனர்.

Trending News