ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

40 வயசுல ஆண்டின்னு சொல்லுவாங்க.. சேப்டிக்காக நயன்தாராவின் பக்கா பிளான்

சுமார் ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தது நயன்தாராவின் கல்யாணம் தான். அதற்கு இப்பொழுது பச்சைக்கொடி காட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி கல்யாணத்தை அறிவித்து விட்டார்.

இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதால் அங்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. நயன்தாரா எதற்காக இப்படி திடீர்னு கல்யாணத்தை அறிவித்து விட்டார் என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் காரணம் இப்போது வெளிவந்துள்ளது.

நயன்தாராவிற்கு இப்பொழுது வயது 38. இங்கே தமிழில் 38 வயதுக்கு மேல் என்றால் ஆன்ட்டி நடிகை என்று சொல்லிவிடுவார்கள். கல்யாணம் வேறு ஆகி விட்டால் நம்மளை எங்கே ஒதுக்கி விடுவார்கள். இதை மனதில் வைத்து ஒரு பெரிய திட்டம் தீட்டியுள்ளார் நயன்தாரா. அதனால் முன்கூட்டியே நாமாகவே செய்துவிடலாம் என்று புத்திசாலித்தனமாக யோசித்திருக்கிறார்.

அதாவது ஹிந்தி நடிகைகளான கரினா கபூர், கேத்தரினா கைஃப், தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத் போன்ற ஹீரோயின்கள் 40 வயதை தொட்டாலும் இன்னும் மார்க்கெட் குறையாமல் பாலிவுட்டில் கலக்கி வருகிறார்கள். ஏற்கனவே சல்மான் கானிடம் இருந்து நயன்தாராவிற்கு அழைப்பு வந்ததாம்.

அதனால் இப்பொழுது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் நம்மளும் 40 வயதானாலும் அவர்களைப் போல சில காலம் நடிப்பில் வெளுத்து வாங்கலாம் என்று பெரிய திட்டம் போட்டு ஹிந்தி பக்கம் செல்லவிருக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் பிரபல நடிகையாக வளரவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய திருமணத்தை முடித்தவுடன் சல்மான்கான் படத்திலும் இன்னும் ஒரு சில பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி இருப்பதால், போகிறபோக்கில் நயன்தாரா நிச்சயம் பாலிவுட்டில் செட்டில் ஆகி விட வேண்டும் என்று இந்த அவசர திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

Trending News