வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தங்கச்சியாக நடிக்க 4 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்துபோன கோலிவுட்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போல் நடித்த இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய நடிகைகளிலேயே  அதிக சம்பளம் வாங்குபவர். இவர் மற்ற நடிகைகளை விட  இரண்டு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார்.

மேலும் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை ஹீரோவுக்கு இணையாக உயர்த்தினார். அதாவது தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

தற்போது நயன்தாரா தெலுங்கில் காட்பாதர் என்ற படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் நான்கு கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காட்பாதர் திரைப்படம் மலையாள லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் தான் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் மிக குறைவான காட்சிகளே அவருக்கு உள்ளது. இருந்தாலும் இவர் நான்கு கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

காட்பாதர் படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதாகவும், அதனால் தான் அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர் கொடுத்ததாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. நயன்தாராவின் இந்த சம்பளம் தெலுங்கில் நடிக்கும் மற்ற நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும்.

nayanthara-cinemapettai-01
nayanthara-cinemapettai-01

Trending News